Close
ஜூன் 30, 2024 5:21 மணி

புத்தகம் அறிவோம்…நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

தண்ணீர் பூமிக்கான ஞானத் திரவம்…தாகம் தீர்க்க, விதை முளைக்க , உணவு சமைக்க, உடல் மற்றும் மன அழுக்கு நீக்க…கதிரவன் எழும் கடல் நீர், குளித்தவுடன் களங்கிய கண்மாய் நீர், கப்பல் விட்டதேங்கிய நீர், மெய்ம்மறந்து நிற்கவைக்கும் பேரருவி, முன்னோருக்குத் திதி கொடுக்கும் புனிதத் தண்ணீர்…இப்படி எத்தனையோ விதங்களில் மனித வாழ்வோடு கலந்திருக்கின்றது தண்ணீர். பூமியின் முப்பங்கு நீராலானது, முழுமனிதனின் எழுபது சதம் நீராலானது.

“எல்லா மனிதர்களும் நீராலானவர்கள் தான். ஆனால் நிகமானந்தா போன்றோர்கள் நீருக்காக அழிந்தவர்கள். அழிந்தவர்களை அறிவது கூட ஒரு வகையில் அறம்தான்.(பக்.11).

இமயமலையில் அமைத்துள்ளது’ மத்ரி சதன் ஆசிரமம்’ இந்த ஆசிரம் 1997 ல் துறவி சிவானந்த சரஸ்வதி அவர்களால் தொடங்கப்பட்டது. இவர் கொல்கத்தாவைச் சேர்ந்த வேதியியல் பேராசிரியர். இவரின் நோக்கம் உன்னதமானது.

கங்கை நதி துவங்கிய இடத்திலிருந்து கடல் சென்று சேரும் வரை 2545 கி.மீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்தியாவின் வாழ்வாதாரமான இந்த ஜீவநதி, தற்காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம், அரசு அனுமதியுடன் நடைபெற்று வரும் சுரங்கப்பணிகள், அதன்வழியே திருடப்பட்டுவரும் கனிமவளங்கள், மேலும் ரசாயன ஆலை கழிவுகள் மற்றும் பெரு நகரங்களின் சாக்கடைக்கழிவுகள் கணக்கில்லாமல் கங்கையில் கலக்கின்றன.

இந்த நதி நீர் கெடாமலிருக்க முக்கிய காரணம் கங்கையில் கலந்திருக்கும் மிகையான ஆக்ஸிஜன் மற்றும் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள்தான். அரசின் தவறான நிர்வாக நடவடிக்கைகளினால் ஆயிரக்கணக்கான தடுப்பணைகளால் கங்கை நதி தடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அனைத்துப் பிரச்சனைகளிலிருந்து கங்கையைக் காப்பாற்ற மத்ரி சதன் கடந்த கால் நூற்றாண்டாக போராடி வருகிறது. இந்த சாதுக்களின் அமைப்பு கங்கையைப் பாதுகாப்பது மட்டும் தங்களின் முழுமுதல் கடமையாகக் கொண்டுள்ளார்கள்.

அந்த ஆசிரமத்தைச் சேர்ந்த துறவி நிகமானந்தா 114 நாட்கள் உண்ணாநோம்பிருந்து உயிர்நீத்துள்ளார். அதே போன்று  சுவாமி கயன்ஸ் வோரோப் என்ற ஜி.டி. அகர்வால் 109 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்துள்ளார். அதேபோல மற்றொரு துறவி 127 நாட்களுக்கு மேலாக உண்ணாவிர மிருந்து உயிர் நீத்துள்ளார். இவர்களின் இந்த தண்ணிருக்கான உயிர்த்தியாகத்தைப் பற்றிப் பேசுகிறது இந்த நூல்.வெளீயிடு-குக்கூ காட்டுப்பள்ளி.

#சா. விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top