Close
நவம்பர் 21, 2024 6:14 மணி

புத்தகம் அறிவோம்… நான் அறிந்த ராஜாஜி..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- நான் அறிந்த ராஜாஜி

டிசம்பர் 10, ராஜாஜியின் பிறந்த தினம். பிறந்த ஆண்டு 1878.

காந்திஜி 1927 ல்”எனக்கு வாரிசாக விளங்கக் கூடியவர் அவர் ஒருவர்தாம் ” என்று ராஜாஜியைப் பற்றிச் சொன்னார்: அரசியலில் அவர் காந்திஜியின் வாரிசு ஆகாவிட்டாலும் சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக ராஜாஜி விளங்கினார்.

மகாத்மாவுக்கு பக்கபலமாக இருந்து, சுதந்திரப் போராட்டத் தில் ஈடுபட்ட முக்கியத் தளபதிகளுல், தென்னிந்தியர் இவர் ஒருவரே. ராஜாஜிக்கும் காந்திஜிக்கும் இடையிலிருந்த தொடர்பில் உள்ளார்ந்த சுவாரசியமும் உண்டு. அவ்விருவருக் குமான தொடர்பின் ஆழத்தினைச் சீடர், சகா, கொள்கை விளக்க உரையாளர் முதலிய வார்த்தைகளால் முழுமையாக உணர்த்த முடியாது.

புகழ் பெற்ற வழக்கறிஞராகவும், பின்னர் தீவிர காங்கிரஸ் காரராகவும் மாறியிருந்த ஸி.ஆர் (ராஜாஜி) தென் ஆப்பிரிக்க காந்தியின் அகிம்சை வழியே, இந்திய சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கான பாதை என உள்ளுணர்வால் உணர்ந்து தெளிந்து, மனதளவில் காந்தியை தனது குருவாகவே வரித்துக்கொண்டு விட்டார்.

ராஜாஜியின் பொது வாழ்க்கைப்பணி, சுதந்திரத்திற்கு பிறகும் அதிமுக்கியத்துவம் பெற்று விளங்கியது. பிரிட்டிஷ் அரசின் நடவடிக்கைகளை எதிர்த்ததுபோல், புதிய அரசின் போக்குகளையும் எதிர்த்தார். சுதந்திரத்திற்கு போராடுபவர் களும் நிர்வாக ஆற்றல் மிக்கவர்களும் சிறந்த எழுத்தாளர் களாகவும்இருப்பது அபூர்வம்;ராஜாஜிஅவ்விதமிருந்தார்.

அவர் லஜ்ஜையின்றி ஆசைப்பட்டது ஒரே ஒரு விஷயத்திற் குத்தான்: தாமும் மற்றவர்களும் நல்லவர்களாக வாழ  வேண்டும் .அரசியலில் அவர் எப்படி இயங்குவார் என்பதை அனுமானிப்பது கடினமாக இருந்தாலும் அவர் தார்மீகக் கோட்பாட்டில் நிலைத்திருப்பார் என்பதில் ஐய்யம் இல்லை.

8.12.2023 “இந்து தமிழ்திசை” வெளியிட்ட,ராஜாஜி -காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதிய “ராஜாஜி: ஒரு வாழ்க்கை”
நூலின் முன்னுரையிலிருந்து .

ம.பொ. சிவஞானம், 40 ஆண்டுகளுக்கு மேலாக ராஜாஜியுடன் தொடர்பிலிருந்தவர். அவர் செங்கோல் இதழில் ” நான் அறிந்த ராஜாஜி” என்ற தலைப்பில் தனக்கும் ராஜாஜிக்கும் இருந்து வந்த அரசியல் – ஆன்மீகம் – இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளிலான தொடர்புகள் பற்றி எழுதிய 41 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.

ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றோடு, அவரின் அரசியல் செயல்பாடு, தமிநாட்டின் முதலமைச்சராக இருந்தபோது அவர் செய்த பணிகள், அரைநாள் கல்வியை தான் ஆதரித்தது, சுதந்திராக் கட்சி தோற்றம் என்று சுதந்திரத்திற்குப் பின்னான ராஜாஜியின் செயல்பாடுகளை மிகச்சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் ம.பொ.சி.

“தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தலைவர் ராஜாஜி “என்பது ம.பொ.சியின் கருத்து. ராஜாஜியைப் பற்றிய மாற்றுப் பார்வை கொண்ட வாசிக்கப்பட வேண்டிய நூல்.

தனக்கும் ராஜாஜிக்கும் இடையே பல்வேறு கருத்து முரண்பாடு கள் இருந்தாலும், உணர்வுபூர்வமான நட்பைக் கொண்டிருந் தாக நூலின் கடைசி பகுதியில் குறிப்பிடுகிறார் ம.பொ.சி.

“மூதறிஞர் ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருஞ்சொத்து. தமிழர் அவரை என்றென்றும் தங்கள் இதயத்தில் வைத்து போற்றி வர வேண்டும் “என்று நூலை நிறைவு செய்கிறார் ம.பொ.சி..

வெளியீடு:-அமராவதிகதவு எண் 7/43, அமராவதி சாலை,
கருப்பம்பட்டி -அஞ்சல்திருச்சி மாவட்டம் -621110
9444169725-ரூ.100.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை-புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top