அருட்பெரும்ஜோதி தனிப் பெருங்கருணை வள்ளலாரது கொள்கைகள்.
“கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ் ஜோதியர் !சிறு தெய்வ வழிபாடு கூடாது !உயிர்ப்பலி கூடாது, புலால் உண்ணலாகாது-சாதி சமய வேறுபாடுகள் கூடாது.எவ்வுயிரும் தன்னுயிர் போல் எண்ண வேண்டும்.
ஏழைகளின் பசியைப் போக்க வேண்டும்.எதிலும் பொது கோக்கம் வேண்டும்.இறந்தவர்களை எரிக்காமல் புதைக்க வேண்டும்.ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீடு பெற உதவும் என்பன அவரது கொள்கைகள்(பக். 13).
திரு அருட்பா:ஆறு திரு முறைகள். அதாவது ஆறு பகுதிகள் .399 பதிகங்கள். 5818 பாடல்கள்.இதில் அருட் சோதி அகவல் ஒரு மலை போன்றது. அதன் ஒவ்வொரு அடியும் அதன் படிகளைப் போன்றவை.
இவையே அருட்பாவின் அமைப்பு இறைவனை முன்னிறுத்தி 5818 பாடல்களைப் பாடிய ஒரே புலவன், ஒரே துறவி, ஒரே ஞானி வள்ளலார்(பக். 29).
–
“வள்ளலாரும் அருட்பாவும் “, 1980 ஜனவரி 9, 10 தேதிகளில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முத்தமிழ் காவலர் டாக்டர் கி.ஆ.பெ.விசுவநாதம் , வள்ளலார், திரு அருட்பா என்ற இரு தலைப்புகளில் ஆற்றிய சொற்பொழிவின் நூல் வடிவம்.
முதல் சொற்பொழிவில், வள்ளலார் யார்?, அவரின் வாழ்க்கை வரலாறு, போதித்த கொள்கைகள் யாவற்றையும் ரத்தினச் சுருக்கமாக தந்திருக்கிறார்.
இரண்டாவது சொற்பொழிலில் திருஅருட்பா அமைப்பு தொடங்கி அதன் சிறப்புகள் யாவற்றையும் விளக்கியுள்ளார் கி.ஆ.பெ. இன்றைய விரைவு வாசிப்பிற்கேற்ப அன்றே கி.ஆ.பெ. சொற்பொழிவாற்றியிருக்கிறார். 48 பக்கங்களில் வள்ளலாரை முழுமையாக அறியச் செய்திருக்கிறார். வெளியீடு- சென்னை பாரி நிலையம், விலை ரூ.15.
# சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #