Close
மே 13, 2024 2:22 காலை

கடலோர காவல் படை சார்பில் கைப்பந்து போட்டி 16 அணிகள் பங்கேற்றன

சென்னை

இந்திய காவல் படையின் 48-வது உதய தினத்தையொட்டி சென்னை ராயபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளின் வீரர் மற்றும் வீராங்கனைகளுடன் கடலோர காவல் படை கிழக்கு மண்டல ஐஜி டோனி மைக்கேல், டி ஐ ஜி அனில்குமார் மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் உடன் உள்ளனர்.

கடலோர காவல் படை சார்பில் கைப்பந்து போட்டி 16 அணிகள் பங்கேற்றன.

இந்திய காவல் படையின் 48-வது உதய தினத்தையொட்டி சென்னை ராயபுரத்தில் கடலோர காவல் படை சார்பில் கைப்பந்து போட்டி 16 அணிகள் பங்கேற்றன
இந்திய கடலோர காவல் படை சார்பில் சென்னை ராயபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கைப்பந்து போட்டியில் பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன.
இந்திய கடலோர காவல் படையின் 48-வது உதய தினத்தையொட்டி கிழக்கு மண்டலம் சார்பில் பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மீனவ மக்களோடு நல்லுறவை மேம்படுத்தும் வகையிலும் கடலோர பாதுகாப்பு பணிகளில் மீனவர்களுடன் இணைந்து செயல்படும் வகையிலும்  சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற கைப்பந்து போட்டி சென்னை ராயபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த 16 அணிகள் சார்பில் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். திரைப்பட நடிகர் ஸ்ரீ சாய் தீனா முன்னிலையில் கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய டிஐஜி சுனில் குமார் போட்டிகளை தொடங்கி வைத்தார். பல்வேறு சுற்று லீக் போட்டிகளுக்குப் பிறகு இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
ஆண்கள் பிரிவில் இறுதி போட்டியில் டீம் சீ பேர்ட்ஸ் மற்றும் பட்டனம்பாக்கம் அணிகள் மோதின. இதில் டீம் சீ பேர்ட்ஸ் அணி வெற்றி பெற்று ஜாம்பியன் பட்டத்தை வென்றது.  பெண்கள் பிரிவில் மயிலாப்பூர் லேடி சிவசாமி பள்ளியும், பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணிகளும் பங்கேற்றன.  இதில் மயிலாப்பூர் லேடி சிவசாமி பள்ளி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதனையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய தளபதி டோனி மைக்கேல்,  சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராயபுரம் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, ஆர் கே நகர்ஜே. ஜே. எபிநேசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top