Close
ஜூலை 4, 2024 6:26 மணி

புத்தகம் அறிவோம்… மனித சுபாவம்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- மனிதசுபாவம்

பிறந்த மண், அதன் வளம் நம் சுபாவத்தை நிர்ணயிக்கும். பஞ்சாபிகள் வீரர்கள். உபி யில் பிறந்தவர்கள் தலைவர்கள். வங்காளிகள் உணர்ச்சி வசப்பட்டவர்கள். தமிழர்கள் பக்திமான்கள். மராட்டியர்கள் தத்துவம் பேசுபவர்கள். மார்வாரில் பிறந்தவர்கள் செல்வந்தர்கள். கோயம்புத்தூர் மக்கள் உழைப்பாளிகள். தஞ்சாவூரிலும் காவிரிக்கரையிலும் பிறந்தவர்கள் சுக ஜீவனம் செய்பவர்கள் , பனைமரம் மட்டும் வளரும் ஊரில் சுயநலம் அதிகம் என்ற கருத்துகள் ஆராய்ச்சி வல்லுனர்களுடையன.

இவை போன்ற உண்மைகள் ஒவ்வொர் ஊருக்கும் பொருத்த மானதுண்டு. பனை மட்டும் வளரும் ஊர் நீர்வளமற்றதாக இருக்கும். இங்கு பிழைப்பதே அரிது. பிறரை உபசரிப்பதோ, மற்றவர்க்கு உதவி செய்வதோ, இலட்சியமாக நினைக்கவோ நமக்கு வசதியிருக்காது. அண்ணனைத் தேடிவந்த தம்பியை’ வெளியில் போய்ச் சாப்பிட்டுவிட்டு வா, பிறகு உனக்குத் தேவையானதைச் செய்கிறேன்.’ என்று காவிரிக்கரையில் பிறந்தவனாலோ, நிர்வளம் மிகுந்த ஊரைச் சேர்ந்தவனாலோ சொல்ல முடியாது. பிறர் சொல்வதைக் கேட்டுக் கொள்ளவும் முடியாது. பனை மட்டும் வளரும் ஊரில் பிறந்தவரால் அந்தச் சொல்லைச் சொல்ல முடிகிறது.

ராஜஸ்தானில் நீர் பஞ்சமான இடங்களில் பாத்திரத்தைக் கழுவ தண்ணீர் இல்லாததால், மணலால் தேய்த்து துணியால் துடைக்கும் பழக்கம் உண்டு. இவர்கள் ஒரு பக்கெட் தண்ணீரைத் துணி துவைக்கப் பயன்படுத்தி, அதைக் கீழேவிடாமல் பிடித்துத் தெருவில் தெளிக்கவோ, செடிக்கு ஊற்றவோ பயன் பயன்படுத்துவதால் சிக்கனம் சுலமாக வருகிறது. ( ராஜாஜி ஒரு நாளைக்கு குளிக்க துணி துவைக்க பயன்படுத்திய தண்ணீர் அளவு 50 லிட்டர்) எனவே பணம் எளிதில் சேருகிறது. அங்கு பிறந்து வெளியில் வந்தவர்கள் செல்வ முள்ளவர்களாக இருப்பார்கள்(பக். 16-17).

மனித சுபாவத்தை நாய் வாலுக்கு ஒப்பிட்டுச் சொல்வார்கள். சுபாவம் என்பது பிறப்போடு வந்தது,இனி மாறாதது என்பது உலகம் அறிந்த உண்மை, நம்பிக்கை.  சுபாவம் வெளிவந்து விட்டது என்றால், சுபாவத்தை ஏதோ ஒன்று இதுவரை மறைத்திருந்தது என்று பொருள். ஒரு மனிதனின், கோபம், அழுகை, சிரிப்பு, தாராளம், கருணை அன்பு, வெறுப்பு, பொறாமை எல்லாம் சுபாவத்தோடு தொடர்புடையது.

Nature என்று ஆங்கிலத்தில் சொல்வதையும், Character என்பதையும் தமிழில் சேர்த்து சுபாவம் எனலாம். நாம் இவற்றை பெற்றோரிடமிருந்து பிறப்பில் பெருகிறோம். வளர்ப்பால் குடும்பதினரிடமிருந்தும் பெருகிறோம்.

பிறந்த ஊருக்கும், சேர்ந்த சமூகத்திற்குமுரிய குணங்களு முண்டு; பள்ளிக்குரிய பழக்கங்கள் உண்டு. சொந்தமாக கண்டு தெளியும் நிலைகளும் இவற்றுடன் சேர்ந்து கொள்ளும். பெண்ணுக்கும் ஆணுக்கும் சுபாவம் வேறுபடும். செல்வ நிலை, அந்தஸ்து, உடல்நிலை ஆகிய சந்தர்ப்பங்களும் இவற்றை நிர்ணயிக்கும்.

கர்ம யோகி எழுதியுள்ள மனித சுபாவம் “ஒரு வாழ்வியல் நூல் “. சுபாவம் என்றால் என்ன? எப்படி உருவாகிறது? சுபாவங் களை எப்படி மாற்றிக் கொள்வது? என்பன போன்ற பலவற் றிற்கு விளக்கம் சொல்வதோடு, மனிதன் நெறியோடு, உன்ன தமாக வாழ்வதற்கான வழிமுறைகளையும் சொல்கிறது.

பலவேறு தேசங்களில் வசிக்கும் மக்களின் சுபாவங்கள், தலைவர்களின் குணாதியங்கள், அவைகளோடு தொடர் புடைய பல்வேறு நிகழ்வுகள், சம்பவங்களையும் சொல்லும் ஒரு தகவல் களஞ்சியமாகவும் இந்த நூல் விளங்குகிறது.

சுத்தம், சுகாதாரம், சுற்றுச்சூழல், அரசுத்துறை சார்ந்த சுபாவங்கள், உடல் மொழி, பேச்சாற்றல் போன்றவற்றையும் பற்றிப் பேசுகிறது இந்த நூல். எல்லோருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் நூல் எழுதப்பட்டுள்ளது. அனைவ ருக்குமான நூல்.வெளியீடு-மதர்ஸ் சர்வீஸ் சொசைட்டி,5, புதுவை சிவம் தெரு,வெங்கட்டா நகர்,பாண்டிச்சேரி. 605 001-ரூ.200/.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top