முதல் பெண் ஆதீனம்,புதுக்கோட்டை, திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் ஆதீனகர்த்தர் அருள்மிகு அன்னை சாயிமாதா சிவ பிருந்தாதேவிஅவர்களுக்கு, பெருந்தலைவர் காமராஜ், பக்தவச்சலம், மு.கருணாநிதி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தமிழகத்தின் ஆதின சந்நிதானங்கள்,
அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் , மன்னர் மரபினர், தமிழறிஞர்கள், அதிகாரிகள், கலைத்துறையினர் மற்றும் சான்றோர்கள் என பல்வேறு துறை சார்ந்தவர்களிடமிருந்து வரப்பெற்ற மடல்களின் தொகுப்பே “ஆதீன அன்னைக்குச் சான்றோர் மடல்கள் “.
கடிதங்களின் பெருமையை, சிறப்பை, அவசியத்தை இன்றைய தலைமுறையினர் உணரும் வண்ணம் நேர்த்தியாக தொகுத்தளித்திருக்கிறார் இன்றைய ஆதீனகர்த்தர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் அவர்கள். இதில் 195 கடிதங்கள் உள்ளன. கடிதங்கள் வர பெற்ற வடிவத்திலேயே, எழுதியவர்களின் கையெழுத்து வடிவத்திலேயே இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
ஆன்மீக, கலை இலக்கிய, பண்பாட்டு,வரலாற்று ஆவணமாக இந்த நூல் திகழ்வதாகமேனாள் தமிழ்ப் பல்கலைகழக துணைவேந்தர் ம. ராஜேந்திரன் தனது மதிப்புரையில் குறிப்பிடுகிறார்.புதுக்கோட்டை வரலாற்றிற்கு புதுவரவு.
வரலாற்று மாணவர்கள், ஆய்வாளர்கள் வாசிக்க வேண்டிய ஆவணம். வெளியீடு-திலகவதியார் திருவருள் ஆதினம்,
1120/5, தஞ்சை சாலை,மச்சுவாடி,புதுக்கோட்டை 622001.
97891 82825.விலை-ரூ 400/.
# சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #