Close
மே 20, 2024 4:35 மணி

புத்தகம் அறிவோம்… உயிர் வளர்க்கும் திருமந்திரம்

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- உயிர்வளர்க்கும் திருமந்திரம்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ்ச் செய்யுமாறே ! -திருமூலர்(பக். 13).”திருமந்திரம் ஒரு பக்கம் பணிவு பேசும். மறுபக்கம் துணிவு பேசும். ஒருபக்கம் உயிர் நிலைமையும் உடல் நிலையா மையும் பேசும்; மறுபக்கம் உடலின் துணையின்றி உயிர்நிலையாமை பேசும்.

ஒரு பக்கம்’வான்’; மறுபக்கம்’ தான்’ என்னும். சித்தாந்தம் பேசும்; சித்தர் நெறி பேசும்; வேதாந்தமும் பேசுவதாக மாயையினால் மயங்கும். ஒரு பக்கம் தமிழ் முழக்கம் செய்யும்; மறுபக்கம் வடமொழி சிணுங்காமல் பார்த்துக் கொள்ளும். ஆகமத்தையும் போற்றும் ; வேதத்தையும் ஏற்கும். ஓகத்தையும் முன்வைக்கும்; அறிவே இறுதி என்னும். அறிவைத் தேடி தொடங்குகையில், அன்புணர்ச்சி இல்லாமல், அருள் கனிந்து நில்லாமல், அறிவிருந்து என்ன பயன் என்று குறள் கருத்தைப் பரப்ப வரும், திருமந்திரத்தில் முறைப் பாடும் உண்டு; முரண்பாடும் உண்டு.

உயிர் வளர்க்கும் திருமந்திரம் நூலாசிரியர் கரு.ஆறுமுகத்தமிழன் தனது முன்னுரையில் .

திருமூலரின் திருமந்திரத்தை எளிய முறையில், இனிய தமிழில் அறிமுகப்படுத்தும் நூல் இது. ‘இந்து தமிழ் திசையின்’ ஆனந்த ஜோதி இணைப்பில் வெளிவந்த 50 கட்டுரைகளின் தொகுப்பு.இந்து தமிழ் திசைவெளியீடு- விலை-ரூ.180.

#சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top