பொது சிவில் சட்டம்...
“இந்தியாவிற்கு பொது சிவில் சட்டம் அவசியம் தேவை. ஒவ்வொரு சமுகத்திற்கும் ஒவ்வொரு சட்டம் எனும் முறையின் மூலம் ஒரு நாடு இயங்க முடியாது. “-பிரதமர் நரேந்திர மோடி.(பக்.8).
“பெரும்பான்மையாக இருப்பவர்களுக்கு என்ன சட்டம் இருக்கிறதோ அதை சிறுபான்மையினர் மீது திணிக்கப்படக்கூடிய வகையில் தான் பொதுச் சிவில் சட்டம் இருக்கும் என்றும், பாகுபாடு இன்றி பார்க்கக்கூடிய நிலை இருக்காது என்றுமே எனக்குத் தோன்றுகிறது. பெரும்பான்மை சமூகம் நினைக்கும் விதமாக பொதுச் சிவில் சட்டம் வருமானால் அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
–கண்ணன்,ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி (பக்.65).
ஜனசங்கம் – தற்போது பாரதிய ஜனதாக் கட்சியின்மூன்று முக்கிய கொள்கைகள் 1. இராமர் கோயில் கட்டுவது .2. அரசியல் அமைப்புச் சட்டத்தின், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 வது விதியை நீக்குவது 3. பொது சிவில் சட்டம் கொண்டு வருவது.
உத்திராண்ட் மாநிலம் முதல் மாநிலமாக பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்து தமிழ்திசை அதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் இந்த நூலை வெளியிட்டிருக்கிறது. 34 கட்டுரைகள் இதில் உள்ளது.
அரசியல் தலைவர்கள், புகழ் பெற்ற வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், பத்திரிக்கையாளர்கள் என்று பலருடைய விவாதங்களும் இதில் உள்ளது. வேண்டும், வேண்டாம் என்ற கருத்தை, ஒவ்வொருவரும் மிகவும் அறிவுபூர்வமாக விவாதம் செய்திருக்கிறார்கள்.பொது சிவில் சட்டம் பற்றி முழுமையாக அறிய மிகவும் பயனுள்ள நூல். வெளியீட்டு-இந்து தமிழ் திசை, சென்னை.7401296562.ரூ.200/.
#சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை#