டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, வாழ்நாள் முழுவதும் ஒழிக்கப் போராடிய ; தமிழகத்தின் இசை, நாட்டியம், ஆகிய கலைகளைக் கட்டிக்காத்த;அடிகள்மார், கூத்திகள், ருத்ர கணிகையர், மாணிக்கத்தார், வெள்ளாட்டிகள், தேவனார் மகளார், தளிச்சேரிப் பெண்டுகள், தேவரடியார், பதியிலார், தலைக்கோலி, நக்கன் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்ட தேவதாசி சமூகத்தின், தோற்றம், தேவதாசிகளின் வாழ்க்கை முறை, பொருளாதாரம்,சடங்கு சம்பிரதாயங்கள், கட்டிக்காத்த கலைகள், உயர்வாக தொடங்கி சீரழிந்து போன வரலாறு, என்று அந்தச் சமூகத்தின் வரலாற்றைப் பேசுகின்ற முழுமையான, முதல் ஆய்வு நூல், முனைவர் கே.சதாசிவனின் “தமிழகத்தில் தேவதாசிகள்”.
பேரா.சதாசிவன், மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக்கத்தில் வரலாற்றுத் துறைப் பேராசியராகப் பணியாற்றியவர். தேவதாசிகள் நடனம், வாழ்க்கை முறை, பொருளாதார நிலை போன்றவற்றைப் பற்றி நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவர். இது அவருக்கு முனைவர் பட்டத்தைப் பெற்றுத்தந்தது.
பத்மபூஷன் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி போன்ற சமூகப் போராளியையும், ‘பாரத ரத்னா’ எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற இசை ராணியையும், பாலகரஸ்வதி போன்ற நாட்டிய மேதைகளையும் வழங்கிய சமூகத்தின் வரலாற்றையும், வாழ்வியலையும் அழகியல் வடிவில் வடிக்கப்பட்ட சமுகவியல் ஆய்வின் ஒருமணிமகுடம் இந்த நூல்.
அகநி வெளியீடு, பக்கம். 400, விலை-ரூ 450. செல்-94443 60421.
#சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #