வினோபா பாவே. தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள் வாங்கிக் கொண்டவர் என்று இவரைப்பற்றி காந்தி கூறியுள்ளார். அவரது வாழ்நாளில் 13 வருடங்களில் 34,000 கி.மீ.க்களுக்கு மேல் கால்நடையாக கிராமம் கிராமமாக இந்திய நிலப்பரப்பு முழுவதும் நடந்தே கடந்தவர்.
புரட்சிகரமான பூதான இயக்கத்தைத் தொடங்கி வழிநடத்தியவர். கிராம தான இயக்கம் கண்டவர். சர்வோதய இயக்கத்தின் ஆணி வேர்களில் ஒருவர். கீதை காட்டும் பாதையில் வாழ்ந்தவர். தங்கத்தைத் துறந்து வாழ இயக்கம் கண்டவர். ஸ்ரமதானம் – பொது வேலையில் பங்கெடுப்பது, சாந்தி சேனை, ஜீவதானம் – தனது உயிரையே உயர்ந்த லட்சியத்திற்காக கொடுக்கத் துணிவது போன்ற முன்னோடி இயக்கங்கள் கண்டவர்,
அவர் ஆச்சார்யா வினோபா பாவே . அவரின் கலவிச் சிந்தனைகளைச் சொல்லும் நூல்தான் வினோபா பாவேயின், “கல்வியில் மலர்தல்”.வெளியீடு- தன்னறம் குக்கு காட்டுப் பள்ளி,ரூ.70. செல்-9843870059.
#சா. விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #