மனிதர்கள் தூங்கும் போது எழுப்புவது கூடாது. ஏனெனில் பாவம் சம்பாதிக்காமலிருப்பது தூங்கும் நேரமே. “
“அடக்கமே மாதர்களுக்கு அழகாகும். “”மதம் ஓர் பெரிய விஷயமே. ஆனால் அதை மிகைப்படுத்திப் பேசுவதில் பிரயோசனமில்லை. மற்றவர்களுக்கு உபதேசிக்கும் முன்பு அக்கட்டுப்பாடுகளுக்கு அடங்கி நடக்க முற்படு. “
“அன்பு என்பது யாதொரு பிரதி பிரயோசனத்தையும் எதிர்பாராது செலுத்தப்படுவது; அதுவே கடவுளின் வேலையாகும். “
‘தியாகம்’ என்பது . ‘வேண்டியதை எடுத்துக் கொள்’ என்று மற்றவர்களிடம் சொல்வதல்ல. மற்றவர்களின் நன்மைக்காகச் சிந்தித்து உழைத்துத் தொண்டு புரிவதேயாக .-டால்ஸ்டாய் வாசகங்கள்(பக். 54 – 57).
டால்ஸ்டாயின் நூல்களை, முக்கியமாக “மோக்ஷம் உன்னிடத்தேயுளது. ” என்ற நூலை படிக்க வேண்டுமென இன்றும் (நூல் சுதந்திர போராட்ட காலத்தில் எழுதப்பட்டது) தமது சீடர்களுக்கு சொல்லி வருகிறார். தமது வாழ்நாளில் அநேக அற்புதமான உண்மைகளைத் தெரிந்து கொண்டதற்கு டால்ஸ்டாயே காரணமென காந்தியடிகள் பன்முறை கூறியிருக்கிறார்.(பக்.62-63).
திரு.வி.க.வின் விருப்பத்திற்கிணங்க ஆங்கிலத்தில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்று நூலை முழுமையாக வாசித்து, அதன் சாரத்தை நமக்குத் தந்திருக்கிறார், சுதந்திரப் போராட்ட வீரர், திருமணம் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பதற்கு இடையூறாக இருக்கும் என்று கருதி பிரமச்சாரியாகவே வாழ்ந்த தேசபக்தர் ஆக்கூர் அனந்தாச்சாரி அவர்கள்.
காந்தியின் வாழ்க்கை மாற்றத்தில், Undo the Lost -கடையனுக்கும் கடைத் தேற்றம் – என்ற நூலை எழுதிய ரஸ்கினும், டால்ஸ்டாயும் முக்கிய பங்காற்றியவர்கள். டால்ஸ்டாயின் மீது பற்று கொண்ட காந்தி 1904 ஆண்டில் தான் தொடங்கிய முதல் ஆஸ்ரமத்திற்கு டால்ஸ்டாய் பண்ணை என்று பெயர் சூட்டினார்.
ஆக்கூர் அனந்தாச்சாரி எழுதியிருக்கும் இந்த நூல்தான் தமிழில் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் முதல் நூல் என்கிறார் திரு.வி.க தனது அணிந்துரையில்.
டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றோடு , அவருடைய பொன் மொழிகள், டால்ஸ் டாயிக்கும் காந்திக்கும் இருந்த நட்பு யாவற்றையும் சித்திரமாக்கித் தந்திருக்கிறார் ஆசிரியர்.சுதந்திர போராட்ட காலத்தில் வெளியிடப்பட்ட இந்த நூலை சந்தியா பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது.சந்தியா பதிப்பகம் (2002),சென்னை.ரூ.25.