Close
நவம்பர் 22, 2024 4:34 மணி

புத்தகம் அறிவோம்… கவிஞர் வைரமுத்து எழுதிய… சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்…

தமிழ்நாடு

வைரமுத்துவின் சிற்பியே உன்னை செதுக்குகிறேன்

சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் , தன்னைப்போல் சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தவர்களுக்காக வைரமுத்து எழுதிய புத்தகம் .

இளைஞனேவா..நதியாக நட.. சமுத்திரத்திலே சங்கமிக் கலாம்…சத்தியத்தை நம்பு.. சரித்திரத்திலே எழுத்தாகலாம்… என்று விவேகானந்தர் அறைகூவல் விடுப்பதுபோல், வைரமுத்துவும் இளைஞர்களை அழைத்து இந்த நூலின் வழி பேசுகிறார்.
இளைஞனே வா! உன்னிடம் சில வார்த்தைகள் பேசவேண்டும் சினேத்தோடு என்று ஆரம்பித்து, இலட்சியம், கல்வி, கலை. உறவு, வீரம், எதிர்ப்பு, சாதனை, காதல், ஓய்வு,அடக்கம் , சோம்பல், உணவு, மொழி, இலக்கியம், பார்வை, நண்பன்,புகழ், தாய்மண் என்று 19 தலைப்புகளில்உரையாடி இருக்கிறார் வைரமுத்து.

உனது 17 வது வயதிலிருந்து 24 வது வயதிற்குள் உனது திசை எது என்று தீர்மானிக்கத் தெரிந்து கொள்ளாவிட்டால் உனது பயணத்தில் பாறையில் மோதிய பந்தாக திரும்பிவர வேண்டியிருக்கும் என இலட்சியத்தை தேர்வு செய்ய வேண்டியதின் அவசியத்தைப் பேசியிருக்கிறார்.

இதையே இறையன்பு 17 வயதிலிருந்து 27 வயது வரையான 10 ஆண்டுகளை ” 10 ஆண்டுகள் பத்திரம்” என்பார். இந்த காலத்தில் ஒருவன் சரியான வழியை தேர்ந்தெடுத்து நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொண்டுவிட்டால் அது வாழ்நாள் முழுவதும் கூடவே பயணிக்கும் என்கிறார் இறையன்பு.

“சோம்பல் என்பது ஒருவகையான தற்கொலை” என்றுகூறும் வைரமுத்து’ நாளை என்று தள்ளிப்போடும் நாளெல்லாம் உன் எதிர்காலம் இறந்தகாலமாக மாறிக்கொண்டிருக்கிறது’ என்றும் சொல்கிறார். இதில் உள்ள 19 தலைப்புகளைத் தவிர்த்து , தன் மகன் கார்க்கிக்கு எழுதிய கடிதம், பல்வேறு இடங்களில் இளைஞர்களோடு உரையாற்றிய உரைகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கான அருமையான நூல். 1985 ஆண்டு எழுதப்பட்டு 2019 வரை 26 பதிப்பைக் கண்டுள்ள இப்புத்தகம்.சூர்யா பதிப்பகம் வெளியீடு. 044 – 24342899.

—பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை–

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top