கடலோரக் காவல் படையில் சிறப்பாகப் பணியாற்றிய வீரர்களுக்ககான விருதுகளை கிழக்கு பிராந்திய தளபதி ஏ.பி.படோலா வியாழக்கிழமை சென்னையில் வழங்கினார்.
இந்திய கடலோரக் காவல் படையில் பணியாற்றும் பல்வேறு படை பிரிவினருக்கு அவர்களின் சிறப்பான சேவைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் வழங்கும் விழா, சென்னையில் உள்ள கடலோரக் காவல் படை கிழக்குப் பிராந்திய தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில் கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய தளபதி ஏ.பி.படோலா கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய படைப் பிரிவை சேர்ந்த வீரர்களுக்கு விருதுகளை வழங்கினார். ஆறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட வீரருக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின்போது, 2022 -ஆம் ஆண்டில் கடலோரக் காவல் படையினரின் சிறப்பான செயல்பாடுகள் குறித்த ஆவணப் படம் காண்பிக்கப்பட்டது.
கட்டுரை மற்றும் புகைப்படம் எடுத்தல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை ஏ.பி.படோலா நேரில் அழைத்துப் பாராட்டினார். இதை முன்னிட்டு, கடலோர காவல்படையினர் பங்கேற்ற சாகச நிகழ்ச்சிகளை நடைபெற்றன.