வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா வழங்கினார்.
வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களை நேரில் சந்தித்து ஆறுதல்கூறி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவிக்கானகாசோலைகளை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் வட்டம், பூங்குடி கிராமத்தில் இயங்கி வந்த வெடிமருந்து தொழிற்சாலையில் 30.07.2023 அன்று ஏற்பட்ட விபத்தில், கோவில்பட்டியைச் சேர்ந்த திரு.விமுத்து த/பெ.கருப்பையா ( 31), திரு.திருமலை த/பெ.ஆறுமுகம் ( 30), வெள்ளனூரைச் சேர்ந்த திரு.சுரேஷ், த/பெ.பழனி ( 35) என்பவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைரமணி, மற்றும் குமார் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்படி விபத்து குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர் களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும்தெரிவித்துக் கொண்டு, இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 2 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், கோவில்பட்டியைச் சேர்ந்த வீரமுத்து, திருமலை, வெள்ளனூரைச் சேர்ந்தசுரேஷ் ஆகியோர்களின் இல்லங்களுக்கு இன்று (07.08.2023) நேரடியாகச் சென்ற மாவட்ட ஆட்சியர், மேற்படி நபர்களின் வாரிசுதாரர்களிடம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கப் பட்ட தலா ரூ.3 வட்சம் மதிப்பிலான காசோலையினை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைரமணி, குமார் ஆகியோர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கப் பட்ட தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான காசோலை யினை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்