Close
செப்டம்பர் 20, 2024 9:59 காலை

லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளருக்கு சிறை தண்டனை அபராதம்: ஈரோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஈரோடு

ஈரோடு அருகே லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக காவல் ஆய்வாளருக்கு சிறை தண்டனை

ஈரோடு அருகே  லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக காவல் ஆய்வாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத் தியது.

ஈரோடு மாவட்டம், நம்பியூர்  காவல் நிலையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு  மே மாதம் 15- ஆம் தேதி அடிதடி  தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் தண்ணீர்பந்தல்பாளையத்தை சேர்ந்த விவசாயி சேகர் என்கிற பழனிசாமி(50) என்பவருடைய மகன் மீதும் வழக்கு பதிவானது. அவர் சிறுவன் என்பதால் அந்த வழக்கில் இருந்து விடுவிக்க விவசாயி சேகர் முயற்சி செய்தார்.

இதற்காக அவர் அப்போது பணியில் இருந்த நம்பியூர்  காவல் நிலைய ஆய்வாளர்  விவேகானந்தன்(54) என்பவரை அணுகினாராம். அப்பொழுது  விவசாயி சேகரின் மகனை விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்று காவல் ஆய்வாளர்   விவேகானந்தன் கேட்டாராம்.

இதனால் வேதனை  அடைந்த விவசாயி சேகர், ஈரோடு மாவட்ட  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில்,  ஈரோடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு  போலீஸார்  ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சேகரிடம் கொடுத்து அனுப்பினர்.

திட்டமிட்டபடி கடந்த 2017 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18-ஆம் தேதி நம்பியூர் காவல் நிலையத்துக்கு  சென்ற சேகர் அங்கிருந்த  காவல் ஆய்வாளர்  விவேகானந்தனிடம் ரூ.50 ஆயிரத்தை க கொடுத்துள்ளார்.

அப்பொழுது திட்டமிட்டபடி,  அங்கு மறைந்திருந்த  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார்  லஞ்சப்பணத் தை வாங்கிய  காவல் ஆய்வாளர்  விவேகானந்தனை  கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். இதையடுத்து  வழக்கு பதிவு செய்ததைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் விவேகானந்தன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இவர் மீது ஈரோடு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத் தில்  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார்   வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த தலைமை முதன்மை குற்றவியல் நீதிமன்ற  நீதிபது சரவணன் திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். அதில், லஞ்சம்  வாங்கிய குற்றத்திற்காக  காவல் ஆய்வாளர் விவேகானந்தனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம், விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் அபராதம்  செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில்அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். அதன்படி  விவேகானந்தனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனைை மற்றும்  ரூ.1 லட்சம் அபராதமும்  விதிக்கப்பட்டது. தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் விவேகானந்தன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top