Close
மே 14, 2024 7:52 காலை

மாவட்ட விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் நாள் முகாம் இன்று..

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் இன்று(ஆக.29) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கான ஆகஸ்ட் -2023 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 29.08.2023 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில்  மாவட்ட ஆட்சியர்  மெர்சிரம்யா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் கேட்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் இக்கூட்டத்திற்கு வந்து செல்வதற்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 29.08.2023 அன்று காலை 9.30 மணி அளவில் புறப்படும் அரசு பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மாவட்ட வேளாண்துறை சார்பில்  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top