புதுக்கோட்டையில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணா நிலைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை நீதிமன்ற வளாகம் அருகே காலை முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற உண்ணாநிலைப்போராட் டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஏ. சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
கோரிக்கைகள்: தற்போது நடைமுறையில் இருந்து வரும் இந்திய தண்டனை சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றை முற்றிலும் அகற்றி விட்டு வழக்கறிஞர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் நலன்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரும் புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டம் நடந்தது.
இந்த உண்ணாநிலைப் போராட்டத்துக்கு துணைத்தலைவர் எஸ். ஆர். எம். அசோகன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் நிர்வாகிகள் பரிசுத்தநாதன், ஆறுமுகம், ஏ. முருகேசன் , திருஞானசம்பந்தம், ராஜாஆதிமூலம், காசி. சிற்றரசு, ராஜசேகர், கே .எம். அழகன், பாறை சிவா , மகாலிங்கம் , ரத்தினம், மற்றும் புதுக்கோட்டை, கீரனூர், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்