Close
நவம்பர் 22, 2024 11:44 காலை

பெரியார் பிறந்தநாளில் ஈரோட்டை கலக்கிய சநாதன எதிர்ப்பு பேரணி

ஈரோடு

ஈரோட்டில் நடந்த சநாதன எதிர்ப்பு பேரணி

பெரியாரின் 145வது பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் சமூக நீதி கூட்டமைப்பின், சநாதன எதிர்ப்புப் பேரணியில் திமுக, தமிழ் புலிகள் கட்சி, தலித் விடுதலைக் கட்சி, எஸ்டிபிஐ, தந்தை பெரியார் தி.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி, திராவிட இயங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட 2000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாள் விழாவையொட்டி, சமூக நீதி கூட்டமைப்பு சார்பில், ஈரோட்டில் சநாதன எதிர்ப்பு பேரணி இன்று நடைபெற்றது.

ஈரோடு ஆட்சியர் அலுவலகம் அருகிலிருந்து தொடங்கிய இப்பேரணி நசியனூர் ரோடு, பிரப்ரோடு வழியாக சென்று பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படது.

ஈரோடு
சநாதன எதிர்ப்பு பேரணியயில் பங்கேற்றோர்

இப்பேரணியில் தந்தை பெரியாரின் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும், கருத்துகளையும் வலியுறுத்தும் வகையில், பிரம்மாண்ட கட்அவுட்டுக்களுடன் வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.

முன்னதாக, பன்னீர்செல்வம் பார்க்கில் சமூக நீதி உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெறது. பேரணியில் பெரியார் வேடமணிந்தும், சமூக நீதியை வலியுறுத்தும் வகையிலான பதாதைகள் ஏந்திக்கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது, பேரணியை திமுகவின் ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

ஈரோடு
ஈரோட்டில் பெரியார் பிறந்த நாள் பேரணியில் பங்கற்ற திமுகவினர்

பேரணியில் சமூக நீதி கூட்டமைப்பில் உள்ள திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, தமிழ் புலிகள் கட்சி, திராவிடர் கழகம், திராவிடர் தமிழர் பேரவை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், ஆதித்தமிழர் பேரவை, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லீம் அமைப்புகள், திராவிட இயக்கங்கள், விவசாய அமைப்புகள், வணிக சங்கங்கள் உட்பட 2000 பேர் கலந்து கொண்டனர்.

இப்பேரணியை சமூக நீதிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி, திமுக மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிந்தனைச் செல்வன், சமூக நீதி மக்கள் கட்சியின் தலைவர் வடிவேல் ராமன், முன்னாள் கவுன்சிலர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு திராவிட இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.

இதில், தமிழர்கள் கலைகளை பறைசாற்றும் வகையில் தாரை தப்பட்டை, பறை இசை முழங்க சிலம்பம், ஓயிலாட்டாம், குச்சிப்புடியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகளுடன் உற்சாகமாக நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top