Close
மே 18, 2024 8:21 காலை

கந்து வட்டிக்கொடுமையை தடுக்க  வலியுறுத்தி ஆட்சியரிடம் மாதர் சங்கம் புகார்

புதுக்கோட்டை

ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், மேலத்தோப்பு கிராமத்தில் கூலித் தொழிலாளர்களிடம் கொலை மிரட்டல் விடுத்துவரும் கந்துவட்டிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் புகார் மனு அளித்துள்ளது.

சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச் செல்வி, செயலாளர் பி.சுசிலா, திருவரங்குளம் ஒன்றியத் தலைவர் வி.கலைச்செல்வி, செயலாளர் பி.சோபனா உள்ளிட்டோர் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வேப்பங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மேலத்தோப்பு கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அனைத்துக் குடும்பங்களும் ஏழை விவசாயத் தொழிலாளர்களாக உள்னனர். அற்றாடம் வேலைக்குச் சென்றால்தான் இவர்களின் அடுப்பு எரியும்.

இந்நிலையில், இங்கு உள்ள குடும்பங்களிடம் புதுக்கோட்டை மற்றும் இச்சடியில் செயல்பட்டுவரும் பல்வேறு நுண்நிதி நிறுவனங்கள் அநியாய வட்டிக்கு கடன்கொடுத்துள்ளனர். மாத மற்றும் வாரத் தவனைகளில் கடனைத் திருப்பச் செலுத்தி வந்துள்ளனர்.

தவனை கட்டத் தவறியவர்களிடம் வேறு ஒரு நிதி நிறுவனத் திடமிருந்து கூடுதலாக அவர்களாகவே கடனை பெற்றுக் கொடுத்து இவர்களுக்கான தொகையை வரவு வைத்துள் ளனர். இதனால் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

ஏழைத் விவசாயத் தொழிலாளர்கள் உழைத்து கிடைத்த சிறிய தொகையால் வட்டியே கட்ட முடியாமல் அந்த  மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடனைச் செலுத்த முடியாதவர் களை மிகவும் அநாகரிகமான முறையில் திட்டுவது, வீட்டின் கதவை உடைத்து குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச் செல்வது.

பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது, கொலை மிரட்டல் விடுவது உள்ளிட்ட கீழ்த்தரமான செயல்களில் மேற்படி கந்துவட்டிக் கும்பல் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். அவமானம் தாங்க முடியாமல் சிலர் தற்கொலைக்கும் முயற்சித்துள்ளனர்.

எனவே, மேற்படி அராஜகமான முறையில் நடந்துகொள்ளும் நுண்நிதி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மேலத்தோப்பு கிராம மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களின் மறுவாழ்வுக் கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் புதுக்கோட்டை கணேஷ்நகர் காவல் நிலையத்தில், மேற்படி நுண்நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவும், தங்களுக்கு பாதுகாப்புக் கோரியும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top