Close
நவம்பர் 21, 2024 9:07 மணி

தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி வலியுறுத்தல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற பேரவைக்கூட்டத்தில் பேசுகிறார், முன்னாள் எம்எல்ஏ-பாலபாரதி

எளிய மக்களின் வாழ்வு மேம்பட தமிழ்நாடு வங்கி உருவாக் கப்பட வேண்டும் என்றார் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற  மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் பேரவைக்கூட்டத்தில் பங்கேற்று மேலும்  அவர் பேசியதாவது:

சாதி, மதம் மற்றும் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இன்றி கூட்டுறவு சித்தாந்தத்தின் அடிப்படையில் உறுப்பி னர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் செயல்படுவோம் என இந்தப் பேரவை அறிக்கையில் அறிக்கையில் எழுதி வைத்துள்ளீர்கள். இது நமது அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பர்துகாக்கிற முக்கியமான அம்சம் ஆகும்.

தமிழ்நாடு வங்கி உருவாக்கப்பட வேண்டும் என இங்கு தீர்மானம் நிறைவேற்றி  உள்ளீர்கள். இது வரவேற்கப்பட வேண்டிய மிக முக்கியமான தீர்மானமாகும். இந்தியாவிலே யே மாநில கூட்டுறவு வங்கிகளை இணைத்து கேரள அரசு ‘கேரள வங்கி’யை உருவாக்கி உள்ளது. அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அந்த அரசு அமுல் படுத்தி வருகிறது. வெளிநாட்டு முதலீட்டுகளையும் அந்த வங்கி ஈர்த்து மிகப்பெரிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்குவதில் ஒன்றிய அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளை இணைந்து தமிழ்நாடு வங்கியை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். தமிழ்நாடு அரசு இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.

பேரவைக்கு மாவட்டத் தலைவர் கே.ஆறுமுகம் தலைமை வகித்தார். ஆர்.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற ஓய்வூதியர் சங்க மாவட்டப் பொருளாளர் கே.ஜெயபாலன், பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் டி.திருப்பதி, பொருளாளர் ஆர்.கருப்பையா ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர்.

பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகள் பி.சந்திரகுமார், பி.அர்சத் அப்துல்லா, எம்.ராஜகேசி, டி.சுப்பிரமணியன், டி.ரகுமான், கே.கோவிந்தராசு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

மாநாட்டை நிறைவு செய்து மாநிலத் தலைவர் தி.தமிழரசு சிறப்புரையாற்றினார். முன்னதாக எம்.கோவிந்தராசு வரவேற்றார். எம்.முரளிதரன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top