Close
நவம்பர் 22, 2024 9:16 காலை

2025ம் ஆண்டின் டிஎன்பிஎஸ்சி அறிவிப்புகள்.. தேர்வுக்கு தயாராகுங்க

வரும் 2025ம் ஆண்டு வரவுள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அறிவிப்புகளை தெரிந்துகொள்வோம். மேலும் வெளியீட்டுடு நாள், தேர்வு நாட்கள் மற்றும் எத்தனை நாட்கள் நடைபெறுகிறது என்பதையும் விரிவாகப் பார்ப்போம்.

தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக மட்டும் இந்த உத்தேச ஆண்டுத் திட்டம் வெளியிடப்படுகிறது.

ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படலாம்.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையில் வெளியிடப்படும்.

தேர்வுகளுக்கான பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவை அறிவிக்கை வெளியிடும் நாள்வரை மாற்றங்களுக்கு உட்பட்டது.

அறிவிக்கை தொடர்பான விவரங்களுக்கு தேர்வாணைய இணையதளத்தினை தொடர்ந்து கவனித்து வரவும்.

வ. எண் தேர்வின் பெயர் அறிவிக்கை வெளியீட்டு நாள் தேர்வு தொடங்கும் நாள் தேர்வு நடைபெறும் நாட்களின் எண்ணிக்கை
1 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – I (தொகுதி I பணிகள்) 01.04.2025 15.06.2025 1
2 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (தொகுதி IV பணிகள்) 25.04.2025 13.07.2025 1
3 ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள் ) 07.05.2025 21.07.2025 4
4 ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் ) 21.05.2025 04.08.2025 7
5 ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் / தொழிற்பயிற்சி தரம்) 13.06.2025 28.08.2025 5
6 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) 15.07.2025 28.09.2025 1
7 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – தொகுதி VA பணிகள் 07.10.2025 21.12.2025 1

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top