Close
டிசம்பர் 5, 2024 2:34 காலை

எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தின் சில பகுதிகளில் புயல், பெருவெள்ளம் காரணமாக தொடர்ந்து சில நாட்களாகவே மக்கள் இயல்நிலைக்கு திரும்பவில்லை. ஆங்காங்கே வெள்ளத்தால் வீடுகள் மூழ்கியுள்ளன.

குறிப்பாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும்,

இந்நிலையில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

புயல், பெருமழை பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, அண்ணா கிராமம், கடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூரின் மற்றப் பகுதிகளில் கல்வி நிலையங்கள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் நிவாரண முகாம்களாக உள்ள 22 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top