Close
நவம்பர் 21, 2024 8:47 காலை

அமரன் – திரைப்பார்வை…இங்கிலாந்திலிருந்து சங்கர்..

இங்கிலாந்திலிருந்து சங்கர்

அமரன்- திரைப்பார்வை

ஒரு தேச நாயகனின் வாழ்க்கைக் கதையைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை தயாரித்த உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கு முதலில் வாழ்த்துகள்.

சிவகார்த்திகேயன் நடிப்பும், ரோம் காம் ஹீரோவாக இருந்து மாஸ் ஹீரோவாக மாறியிருப்பதும் சிறப்பாக உள்ளது. அவரது நடிப்பிற்காக பிலிம்பேர் விருதை நிச்சயம் வெல்வார். சாய் பல்லவி சிறப்பான நடிப்பின் மூலம் படத்தின் ஆத்மாவாக திகழ்கிறார்.

அருமையான படத்தொகுப்பு. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தமிழ் படத்தில் அழகான காதல் காட்சிகளை பார்க்கிறேன். சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது.

ஆக்‌ஷன் காட்சிகளை அன்பறிவு மாஸ்டர்கள் சிறப்பாக அமைத்துள் ளனர். ஜி.வி.பிரகாஷ்.., பின்னணி இசை மற்றும் பாடல்கள் இரண்டையும் அசத்தலாக கையாண்ட கதையின் மற்றொரு ஹீரோ. ஏய் மின்னலே பாடல்.. பெரிய திரைகளில் பார்க்கத் தகுந்தது.

அதிரடியான இடைவேளைக்கு முந்தைய 15 நிமிட காட்சிகள் நம்மை சிலிர்க்க வைக்கிறது. படத்தின் ஒவ்வொரு நொடியும் பொழுது போக்குடன் கூடிய முதல் பாதி மிகவும் நன்றாக உள்ளது. காட்சிகள் நேர்த்தியானது. தொழில்நுட்பம் வலிமையானது.

க்ளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் உணர்வுபூர்வமாக இணைக்கப் பட்டுள்ளது. மனதை பிழிந்து கண்ணீருடன் கடக்க வைக்கிறது.

அமரன்.. இந்த வருடத்தின் திரைப்படம் மட்டுமல்ல, தசாப்தத்தின் திரைப்படம் எனலாம், நிச்சயமாக கோலிவுட் சினிமாவின் பெருமைக் குரிய படம் என்றால் மிகையல்ல.அன்பு, அர்ப்பணிப்பு, ராணுவ வீரர்களின் ஒழுக்கம் மற்றும் தியாகத்தின் ஆழத்திற்கு இது ஒரு சான்று.

#இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top