Close
ஜனவரி 7, 2025 7:47 காலை

சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் சாட்டை படப் புகழ் கதாநாயகி அதுல்யா ரவி சுவாமி தரிசனம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் இயக்குனர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் உருவான சாட்டை 2 படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான அதுல்யா ரவி சுவாமி தரிசனம் செய்தார்
தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி சன்னதியில் உள்ள சர்ப்ப விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார்

அதுல்யா ரவி திருக்கோவிலுக்கு வந்த தகவலை அறிந்ததும் கோவிலுக்கு வந்த அவருடைய ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்தும் போட்டோ எடுத்தும் மகிழ்ந்தனர்

தொடர்ந்து அங்கு நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த குழந்தைகளுடன் அவர் போட்டோ எடுத்து அவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடினார். குழந்தைகள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்

நடிகை அதுல்யா ரவியை காண திருக்கோவிலில் பக்தர்கள் சூழ்ந்ததால் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல ஒரு பரபரப்பான சூழல் காணப்பட்டது

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தன்னுடைய வேண்டுதலை நிறை வேற்றுவதற்காக சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலுக்கு வந்ததாகவும் தரிசனம் மிகவும் சிறப்பாக அமைந்ததாகவும் அடுத்ததாக தான் ஒப்புக்கொண்ட புதிய படங்கள் திரைக்கு வர காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top