புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே 1200 கிலோ ரேஷன் அரிசியுடன் கேட்பாரற்று நின்று கொண்டிருந்த மினி லாரியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய் வுப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைப்பற்றினர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே தொண்டைமானேந்தல் கிராமத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் போலீஸார் ரோந்துப் பணியில் இருந்தனர்.
அப்போது, அந்தப் பகுதியில் நின்றிருந்த பொலிரோ பிக்அப் வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் 1200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. வாகனத்தில் யாருமில்லை. எனவே, அரிசி மற்றும் வாகனத்தைக் கைப்பற்றிய போலீஸôர், வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.