பள்ளி வளாகத்தின் அருகே. அரசால் தடைசெய்யபட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளை சோதனை செய்து சீல் வைத்து காவல்துறை நடவடிக்கை எடுத்தது.
புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் காவல் சரகத்திற்குட்பட்டலெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மவுண்ட் சயோன் சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தின் 100 மீட்டர் தொலைவில் உள்ள அழகுபெட்டிகடை, கணேஷ் பெட்டிகடை மற்றும் லெனாவிலக்கில் உள்ள மகாலெட்சுமி பெட்டிக் கடையில் (05.09.2023) தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் வந்திதா பாண்டே, காவல் அலுவலர்களுடன் அங்கு சென்று அதிரடியாக சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை சட்ட விரோத மாக பள்ளிக்கு அருகில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இந்த 3 பெட்டிகடைகளிலும்( Cool lip, .Hans, Ganesh, Vimal , V1) அரசால் தடைசெய்யபட்ட சுமார் 3.5 கிலோ புகையிலை பொருள்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யபட்டது. சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்துக்காக மூன்று கடைகளுக்கும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே முன்னிலையில் உணவு பாதுகாப்புதுறை அலுவலரால் அபராதம் விதிக்கபட்டதுடன் சீல் வைத்து மூடப்பட்டது.