Close
மே 11, 2024 5:58 காலை

அகில இந்திய தொழிற்தேர்வில் பங்கேற்க தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை

தேசிய தொழில் பழகுநர் திட்டத்தில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய தொழிற்தேர்வில் பங்கேற்க புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை
ஆட்சியர் மெர்சி ரம்யா

2024 -ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் (NCEVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர் களாக (Private Candidates) கலந்து கொள்ள கீழ்க்காணும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள்
முதல் வகை (Category 1): தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்:
ஏற்கெனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ITI-ல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் Alied தொழிற்பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெறும் பொருட்டு தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.
இரண்டாம் வகை (Category II): திறன்மிகு தேசிய தொழிற் சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்:
திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற (COE NTC) பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற செக்டாருடன் தொடர்பு டைய தொழிற்பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றி ருந்தால் அப்பிரிவில் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.
மூன்றாம் வகை (Category III): ஆகஸ்ட் 2018- வரை SCVT சேர்க்கை பெற்றவர்:
ஆகஸ்ட் 2018 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற் பயிற்சி குழும (SCVT) தொழிற்பிரிவில் பயின்று தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக அகில இந்திய தொழிற்தேர்வு எழுத அனுமதிக் கப்படுவர்.
நான்காம் வகை (Category IV): பிற விண்ணப்பதாரர்கள்:
8) விண்ணப்பதாரரின் வயது 18-09-2023 அன்று 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.
b) தொழிற் பழகுநர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற் சாலை சட்டம் 1948-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு / உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற் பிரிவு தொடர்பான பணியில் மூன்று வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

c) SCVT திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 2019-ஆம் ஆண்டு முதல் சேர்க்கை செய்யப்பட்டு மாநில தொழிற்பயிற்சி குழுமம் (SCVT) தொழிற்பிரிவு பயின்று தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் 21 வயது பூர்த்தி அடைந்த வர்கள் இந்த Category IV-இன் படி தனித்தேர்வராக விண்ணப்பித்து. முதன்மைத்தேர்வு இன்றி நேரடியாக அனுமதிக்கப்படுவர்.

அகில இந்திய தொழிற்தேர்வுதனித்தேர்வராக தேர்வெழுத விரும்பும் விண்ணப்பதாரர் அத்தொழிற்பிரிவிற்குரிய குறைந்தபட்ச கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுள்ள (Alled Trade)& IV (Experienced Candidates) வகையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (Theory) பாடத்தில் 10.10.2023 மற்றும் செய்முறை (Practical) தேர்வு 11.10.2023 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். கருத்தியல் தேர்வு descriptive type-ல் இடம்பெறும்.

கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே செய்முறை தேர்வில் கலந்து கொள்ள இயலும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஜூலை 2024-இல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற் தேர்வில் தனித்தேர்வராக (Private Candidates) கலந்து கொள்ள அனுமதிக் கப்படுவர். தொழிற் பிரிவிற்கு ஏற்ப அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு (NCEVT), புது டெல்லி மூலம் தேசிய தொழிற் சான்றிதழ் (National Trade Certificate) வழங்கப்படும்.

தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு (Prospectus), ஆகியவற்றை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான தேர்வு கட்டணத்தை (ரூ.200/- ரூபாய் இருநூறு மட்டும்) www.karuvoolam.tn.gov.in என்ற என்ற இணைய தளத்தின் வழியாகவோ அல்லது தமிழக அரசின் கருவூலம்/ பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளை வழியாகவோ e-Challan மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைய வழியாக தேர்வு கட்டணம் ரூ200/- செலுத்தியமைக்கான செலுத்துச் சீட்டு (e-Challan), கல்விச் சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பங் களை 18.092023- தேதிக்குள், முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம். புதுக்கோட்டை-620002  -என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட கடைசி தேதிக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top