Close
நவம்பர் 24, 2024 5:15 காலை

உயர் அலுவலர் திட்டியதாகக் கூறி விஷம் குடித்த அங்கன்வாடி பணியாளர்

ஈரோடு

தற்கொலை முயற்சி

சென்னிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் பாளையம் அங்காடிவாடி மையத்தில் அங்கன்வாடி உதவியாளராக பணி புரிந்து வருபவர் நதியா (39). இவருக்கு ஜெயகுமார் என்ற கணவரும் ஒரு மகன் மற்றும் மனநலம் குன்றிய ஒரு மகளும் உள்ளனர்.

கவுண்டச்சி பாளையம் அங்கன்வாடி மையத்தில் ஆட்கள் இல்லாததால் அந்த மையத்தையும் சேர்த்து கவனித்துக் கொள்ளுமாறுகுழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆனந்தி நேற்று நதியாவிடம் கூறியுள்ளார்.

தனது வீட்டில் மனநலம் குன்றிய மகள் இருப்பதால் அவரை பராமரிக்க வேண்டியுள்ளதாகவும், அதன் காரணமாக இரண்டு அங்கன்வாடி மையங்களையும் ஒரே நேரத்தில் பார்த்துக் கொள்ள முடியாது என்றும் கூறி நதியா மறுத்துள்ளார்.

ஆனால் இதை ஏற்க மறுத்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஆனந்தி, கட்டாயம் ரெண்டு அங்கன்வாடி மையங்களிலும் பணி புரிய வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டதாகத் தெரிகிறது. அவ்வாறு பணி புரியவில்லை என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க எடுப்பேன் என்றும் ஆனந்தி கூறி திட்டி விட்டாராம்.

இதனால் நதியா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஈரோடு அரசு மருத்துவமனையிலும், பின்னர் தனியார் மருத்துவமனை யிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று சென்னிமலை குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தை அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக சென்னிமலை போலீசார் அளித்த வாக்குறுதியை ஏற்று அங்கன்வாடி பணியாளர்கள் கலைந்து சென்றனர்.

# செய்தி: ஈரோடு மு.ப.நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top