Close
நவம்பர் 21, 2024 11:05 காலை

செக் மோசடி வழக்கில், உணவக உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை:

சென்னை

மணலி அருகே இரும்பு குடோனில் திருடிய 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

நத்தத்தில் செக் மோசடி வழக்கில் உணவக உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி, நீதிபதி உதயசூரியா தீர்ப்பளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள கோட்டையூர் – சின்னையம்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (34). இவர் கொட்டாம்பட்டியில் உணவகம் நடத்தி வருகிறார்.
இவர் ,அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் கடந்த 2021-ஆம் ஆண்டு கடனாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வாங்கியிருந்தார்.
ஒரு வருடம் கழித்து கொடுத்த பணத்தை சரவணன் கேட்டுள்ளார். இதற்காக சுந்தரமூர்த்தி வங்கியின் காசோலையை கொடுத்துள்ளார்.
இந்த காசோலையை, வங்கியில் செலுத்தி பணம் பெற முயன்ற போது சுந்தரமூர்த்தி கொடுத்த காசோலைக்கு அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது.
இது குறித்து, சரவணன் நத்தத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு நீதிபதி உதயசூரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், குற்றவாளி சுந்தரமூர்த்திக்கு 1 வருட சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை செலுத்தவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top