Close
நவம்பர் 22, 2024 4:08 காலை

தொழிலதிபரை கடத்திய கும்பலை பிடித்த போலீஸாருக்கு திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் பாராட்டு

புதுக்கோட்டை

கீரனூர் தொழிலதிபர் கடத்தல் வழக்கில் குற்றவாளிகளைகைது செய்த போலீஸாருக்கு நற்சான்றிதழ் வழங்கிய திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் மற்றும் புதுக்கோட்டைமாவட்டகாவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன்

கீரனூர் அருகே தொழிலதிபரை ரூ.70 லட்சம் பணம் கேட்டு கடத்திய கும்பலை 6 மணி நேரத்தில் கூண்டோடு கைது செய்து தொழில் அதிபரை பத்திரமாக மீட்ட புதுக்கோட்டை காவல் துறையினரை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பாராட்டி சான்றிதழ் அளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் சரகம், வடக்குரத வீதியில் வசித்து வரும் பழனியாண்டி பிள்ளையின் மகன் சந்திரசேகரன்(67) என்பவர் CRK டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் தொழில் நடத்தி வருகிறார்.

கடந்த 02.07.2022-ஆம் தேதி காலை 05.05 மணிக்கு சந்திரசேகரன் கீரனூர் வழி குண்றாண்டார்கோவில் சாலையில்  நாஞ்சுர் விலக்கு பிரிவு ரோடு அருகே நடைப்பயிற்சி சென்றபோது, காரில்  வந்த அடையாளம் தெரியாத நபர்கள்  கடத்திச் சென்று  விட்டதாக அவரது மகன் மணிகண்டன் என்பவர் கீரனூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்கவும் கடத்தப்பட்ட நபரை மீட்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டகாவல் கண்காணிப்பாளர்; நிஷா பார்த்திபன்  மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடிவந்தனர்.

இந்நிலையில்,தொழில் அதிபர் சந்திரசேகரனை கடத்திய நபர்கள் புகார் தாரரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு ரூ.70 லட்சம் பணம் கேட்டதன் அடிப்படையில், குற்றவாளிகளை தேடிச்சென்றதில் சூரியூர் அருகே கடத்தப்பட்டவரை இறக்கி விட்டு விட்டு  மர்ம கும்பல் தப்பியோடியது.

புதுக்கோட்டை

மேற்படி கடத்தப்பட்டவர் நல்ல நிலையில் மீட்கப்பட்டு, தப்பியோடிய7  பேரை  6 மணிநேரத்திற்குள் துரிதமாக தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

இவ்வழக்கின் குற்றவாளிகளை துரித நடவடிக்கை மூலம் கைது செய்த தனிப்படையைச் சேர்ந்த கீரனூர் உட்கோட்டகாவல் துணைக் கண்காணிப்பாளர் சிவசுப்பிரமணியன், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும்  காவலர்கள்  ஆகியோரை இன்று 04.07.22-ம் தேதி திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top