Close
மே 14, 2024 12:41 மணி

மணலியில் இரும்பு குடோனில் திருட்டு: 5 பேர் கைது

சென்னை

மணலி அருகே இரும்பு குடோனில் திருடிய 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

மணலி அருகே இரும்பு குடோனில் திருடிய 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

திருவொற்றியூர்,கிராமணி தெருவை சேர்ந்தவர் குமரேசன். மணலி அருகே எலந்தனூர் பகுதியில்  குடோனை வாடகை எடுத்து அதில் இரும்பு ஷெட்டர் தயாரிப்பதற்கு தேவையான இரும்பு பொருட்களை வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை வியாபாரம் முடிந்து இரவு குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் குடோனுக்குச் சென்றபோது  வெளியே பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால்  அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது குடோன் உள்ளே 5 மர்ம நபர்கள் இருந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடித்து வைத்துக் கொண்டு மணலி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து அங்கு சென்ற மணலி காவல் நிலைய ஆய்வாளர் சுந்தர் பிடித்து வைக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் பிடிபட்டவர்கள் திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ராஜேஷ் (38), சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் முத்துராஜ் (46),   கார்த்திக்(28 ), அண்ணாமலை நகரை சேர்ந்தவர்முரளி (26) ராஜாமணி நகரை சேர்ந்தவர் விஜய் (27) என்பது தெரியவந்தது.  மேலும் தங்களை திருவொற்றியூர் சேர்ந்த மோகன் மற்றும் விஷ்ணு ஆகியோர்  கூலி வேலைக்காக அழைத்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

ஒரு மினி லாரியில் இரும்பு பொருள்களை ஏற்றிச் சென்ற தாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர். மேலும் வெளியிலிருந்து திருடி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த  துணி மூட்டைகளையும்  போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து மணலி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட  ஐந்து பேரையும் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தி பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் அடைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top