Close
நவம்பர் 22, 2024 7:17 காலை

மாணவர்கள் துரித உணவை தவிர்க்க வேண்டும்

புதுக்கோட்டை

பழைய கந்தர்வக்கோட்டை இல்லம் தேடிக் கல்வி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமத்துல்லா

மாணவர்கள் துரித உணவை தவிர்க்க வேண்டும் என்றார் உலக இருதய தின விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்ற இல்லம் தேடிக் கல்வி மைய கந்தர்வகோட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அ. ரகமதுல்லா.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் வழிகாட்டுதலின் படியும், கந்தர்வகோட்டை வட்டாரக்கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி  ஆலோசனையின் படியும் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பழைய கந்தர்வக்கோட்டை இல்லம் தேடிக் கல்வி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது இன்றைய தினம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்து பேசியதாவது:

இதயம் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்தும்,நாம் உயிரோடு வாழ்வதற்கு மிக அடிப்படையான ஒன்று நம்முடைய இதயம். அத்தகைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக அவசியம்.
உலக அளவில் ஏற்படும் மரணங்களில் இதய நோயால் இறப்பவர்கள் மிக அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. இந்த இதயத்தை பாதுகாப்பதற்கு நாம் என்ன மாதிரியான உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பது பற்றியும்,உடல் சக்தியை அதிகரிக்கும், இமயமலையில் இருந்து எடுக்கப்படும் இயற்கை ஊட்டச்சத்து.

நம்முடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நம்முடைய உணவுமுறைக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. ஆண்டுதோறும் செப்டம்பர் 29 -ஆம் தேதி உலக இருதய தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அந்த நாளில் உலகம் முழுவதும் இதய ஆரோக்கியம் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.அந்த வகையில் நாமும் நம்முடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பின்பற்றி வேண்டிய சில முககியமான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

தினம் கொஞ்சம் பாதாம் பருப்பை சாப்பிடுவதால் நம்முடைய உடலில் உள்ள (எல்டிஎல்)  கெட்ட   கொலஸ்டிரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இதன்மூலம் இதயத்தை சேதப்படுத்தும் தொற்றுக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஸ்நாக்ஸ் நேரங்களில் வறுத்த, பொரித்த உணவுகளுக்குப் பதிலாக பாதாமை எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 42 கிராம் அளவுக்கு பாதாம்  எடுத்துக் கொள்வதன் மூலம் இதய நோய் ஆபத்து காரணிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
​கீரைகள் மற்றும் இலை வடிவ காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய நோய் ஏற்படும் அபாயம் குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல்வேறு வகையான வைட்டமின்களும் மினரல்களும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் இந்த இலைவடிவ காய்கறிகளில் நிறைந்திருக்கின்றன.
குறிப்பாக இதில் நைட்ரேட்டுகள் அதிகம்ச இருப்பதால் ரத்த செல்களுக்கு ஆக்சிஜன் அதிகம் கிடைக்கவும் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவை அதிகரிக்கவும் செய்ய உதவுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம், இதய தமனிகளில் உண்டாகும் அழுத்தம் ஆகியவை குறைந்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
​முழு தானியங்களை அதிகமாக சேர்க்க சாப்பிட வேண்டும் என பேசினார்.மேலும் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை  ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top