Close
செப்டம்பர் 20, 2024 3:47 காலை

வேளாளர் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

ஈரோடு

ஈரோடு கொங்கு வேளாளர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா

வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில்
முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.

ஈரோடு திண்டலில் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா கல்லூரியில் உள்ள கஸ்தூரிபா காந்தி கலையரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளரும், தாளாளருமான எஸ்.டி.சந்திரசேகர்  தொடக்கி  வைத்து பேசுகையில், மாணவர்கள் கல்வி மற்றும் புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவும், சுய ஒழுக்கத்தை பேணிக்காக்க வேண்டும்.

வேளாளர் கல்வி அறக்கட்டளை பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. நடப்பு கல்வியாண்டில் கல்லூரியில் 96 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்றார் அவர்.

முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் எம். ஜெயராமன், புலமுதல்வர் பேராசிரியர் பி.ஜெயச்சந்தர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மதுஸ்ரீ, மோகன்பிரசாத்.

பெற்றோர் ரேவதி, ரவி மற்றும் கணிதவியல் துறை பேராசிரியர் முனைவர் சி.எஸ்.கவுரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். நிகழ்ச்சியில் நிர்வாக மேலாளர் என்.பெரியசாமி, கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top