Close
செப்டம்பர் 19, 2024 11:12 மணி

சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா

புதுக்கோட்டை

திருமயம், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் தாளாளர் டாக்டர் பிச்சப்பாமணிகண்டன் மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணச்சலுகைக் கடிதங்கள் வழங்கினார். உடன் கல்லூரி செயலர் மு.விஸ்வநாதன், சிறப்புவிருந்தினர் பாகை. இரா.கண்ணதாசன், முதல்வர் குழ.முத்துராமு ஆகியோர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா (17.11.2022) வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரி தாளாளர் டாக்டர் பிச்சப்பாமணிகண்டன்  தலைமை வகித்து, 12 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியருக்கு சிறப்புக் கல்விக் கட்டணச் சலுகைக் கடிதங்களை வழங்கி வாழ்த்திப் பேசினார்.

முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர்நீ.வெண்ணிலா விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு விழாவுக்கு முன்னிலை வகித்துப் பேசினார்.  கல்லூரிச்செயலர் மு.விஸ்வநாதன் வாழ்த்துரை வழங்கினார்.

தன்முனைப்புப் பேச்சாளர் பாகை.இரா.கண்ணதாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு  பேசியதாவது : வாழ்க்கையில் உயர வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் வணங்க வேண்டிய முதல் தெய்வம் பெற்றோர்தான். பெற்றோரின் உழைப்பையும் தியாகத்தையும் நினைத்துப் பார்ப்பவர்கள் வாழ்வில் வெற்றி கண்டுவிடுவார்கள்

. பணிவும் மரியாதையும் நமக்கான வெற்றியை ஈட்டித் தரும். மாணவர்களின் நலனை தம் நலம்போல் பேணிக் காக்கும் ஆசிரியர்களின் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுங்கள். மாணவர்களின் வளர்ச்சி கண்டு மகிழ்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் பெற்ற ஞானத்தையும், அனுபவங்களையும் சேகரித்துக் கொள்ளுங்கள். பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு நல்ல புத்தகங்களை தேடிப்படியுங்கள். நல்ல வாசிப்புப் பழக்கம் வாழ்க்கையின் உயரத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

அதேபோல் ஒவ்வொரு மனிதனும் படித்துணர்ந்து அதன்படி வாழ வேண்டிய மிகச்சிறந்த புத்தகம் திருக்குறள். வாழ்வின் அனைத்துக்கும் தீர்வு தரக்கூடிய நூல் திருக்குறள். எல்லாவற் றையுமேநல்ல காரண காரியங்களோடு செய்திருப்பவன் தமிழன். நல்ல தமிழில் பேசுங்கள். நம் தாய் மொழி வளர துணை நில்லுங்கள். அதேபோல் ஒழுக்கத்தையும், கல்வியையும் இரு கண்களாகக் கருதுங்கள். இரண்டும் ஒரு சேர இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

செல்போன்களில் நேரத்தை வீணடிப்பதை தவிருங்கள். செல்போன்மனிதகுல வளர்ச்சிக்கு பயனுள்ள கருவி. ஆனால்,அதனைப் பக்குவமாகப் பயன்படுத்துங்கள். திட்டமிட்டு உழையுங்கள். உங்கள் இலக்கினை நிச்சயம் அடைவீர்கள்.

நல்ல நண்பர்களை அடையாளம் கண்டு நட்புக் கொள்ளுங் கள். இது இனம் புரியா இளம் வயது. இந்த வயதில் வாழ்வின் பயனுள்ள திசை நோக்கிப் பயணம் செய்யுங்கள். பெற்றோ ரும் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணியுங் கள். பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் பிள்ளைகளுக்கு மிகவும் அவசியம். அதேசமயம் கண்டிப்பி னையும் கை விட்டுவிடாதீர்கள்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைப் பற்றி மிகப்பெரும் கனவுகளைச் சுமந்து நிற்கிறார்கள். அந்தக் கனவினை மெய்ப்பட வைக்கும் பொறுப்பு பிள்ளைகளிடம் தான் இருக்கிறது என்றார் அவர்.

நிறைவாக மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் டாக்டர் வரதராஜன் நன்றி கூறினார். இவ்விழாவில் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசியர்கள், மாணவ, மாணவியர்,பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படவிளக்கம் : திருமயம், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் தாளாளர் டாக்டர் பிச்சப்பாமணிகண்டன் மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணச்சலுகைக் கடிதங்கள் வழங்கினார். உடன் கல்லூரி செயலர் மு.விஸ்வநாதன், சிறப்புவிருந்தினர் பாகை. இரா.கண்ணதாசன், முதல்வர் குழ.முத்துராமு ஆகியோர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top