Close
நவம்பர் 22, 2024 12:38 மணி

தங்க சாலை அரசு தொழில் பயிற்சி நிலையத்திற்கு ரூ. 3.73 கோடியில் புதிய கட்டடங்கள்

சென்னை

சென்னை தங்கசாலை அரசு ஐடிஐ-க்கு புதிய கட்டிடப்பணியை தொடக்கி வைத்த ராயபுரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி.

சென்னை தங்கசாலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூபாய் 3.73 கோடியில் புதிய கட்டடங்கள் அமைப்பதற்கான பூமி பூஜையில்  ராயபுரம் சட்டப்பேரவை  உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி   பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
இராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 53 -ஆவது வார்டில்  தங்கசாலை தொழில் பயிற்சி நிலையம் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இப்பயிற்சி மையத்தை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கு அண்மையில் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
இதனையடுத்து புதிய கட்டட பணிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில்  ராயபுரம்  சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி கலந்துகொண்டு ரூ.3.73 மதிப்பீட்டில. வகுப்பறை, ஆய்வுக்கூடம், பயிற்சி கூடம் உள்ளிட்டவைகளுக்கான புதிய கட்டடங்களை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது  எம்எல்ஏ  மூர்த்தி கூறுகையில், வடசென்னை என்பது தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் நிரம்பிய பகுதியாகும்.  திறன் மிகுந்த தொழிலாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு தமிழகத்தின் பழைமையான தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒன்றான தங்க சாலை தொழில் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு புதிய கட்டிடங்கள் கட்டடங்கள் அமைக்கப்பட்ட பிறகு இப்பயிற்சி மையத்தில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் பயிற்சி உபகரணங்கள் நிறுவப்பட்டு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சி நிலையமாக மேம்படுத்தப்படும்.
மேலும் நிகழ் கால தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்ப திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.  மேலும் புதிய பிரிவுகள் தொடங்கப்பட்டு  கூடுதலாக மாணவர்கள் ஆண்டுதோறும் அனுமதிக்கப்பட்டு பயிற்சி பெறுவார்கள். இப்பயிற்சி மையத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு படித்து முடித்தவுடன் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்றார் மூர்த்தி.
நிகழ்ச்சியில்  இராயபுரம் திமுக மேற்கு பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ், மாமன்ற உறுப்பினர் வேளாங்கண்ணி, வட்ட செயலாளர் கௌரீஷ்வரன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top