Close
நவம்பர் 22, 2024 12:04 மணி

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை

வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பட்டம் பெற்ற மழலையர்

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.  மேல்நிலைப்பள்ளியில் மழலையர் குழந்தை களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்குபள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். புதுக்கோட்டை நகர்மன்றத்தலைவர் திலகவதிசெந்தில் மற்றும் கல்வியாளர் கவிஞர் மு. கீதா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு குழந்தைகளுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினர். பள்ளியின் ஆலோசகர் கவிஞர் அஞ்சலிதேவிதங்கம் மூர்த்தி மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

இது மாணவர்களுக்கான விழா என்பதால் யூ.கே.ஜி மாணவர்கள் பி. கருணாசாகர் மற்றும் வி. சுனில்தேவ் ஆகியோர் தாங்கள் மழலை வயதில் பட்டம் பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

சிறப்புவிருந்தினர் நகர்மன்றதலைவர் திலகவதிசெந்தில் பேசும் போது“கம்பன் வீட்டுகட்டுதறியும் கவிபாடும் என்பதற்கு இணங்க பள்ளி முதல்வரைபோல மாணவர்களும் திறமையோடு இருக்கிறார்கள். பள்ளிவிட்டு வந்ததும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் கலந்துரையாடி தினமும் இரண்டு மணி நேரம் பாடங்களை கற்கசெய்யவேண்டும்.

பட்டம் பெற்ற மழலை மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என்றுபேசினார்.

தொடர்ந்து சிறப்புரையாற்றிய கவிஞர் மு. கீதா குழந்தைக ளோடு கலந்துரையாடி டோரா புஜ்ஜி, ஜோட்டாபீம் இன்னும் பல கார்ட்டூன்களையும் எடுத்துக் கூறியதோடு பெற்றோர்கள் குழந்தைகளுக்குவழங்கவேண்டியஉணவுகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் குழந்தைகளை அதிகநேரம் கைபேசி பயன்படுத்த செய்வதால் ஏற்படும் கண்பார்வை குறைபாடு, மனஉளைச்சல், தூக்கமின்மை ஆகிய குறை பாடுகள்பற்றியும் உரையாற்றினார்.

முன்னதாக பள்ளியின் மேலாண்மை இயக்குநர் நிவேதிதா மூர்த்தி வரவேற்புரையாற்றினார். நிறைவாக மழலை மாணவர் ஹேம்நாத்ரதன் நன்றி கூறினார்.

விழாவில் பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார், மகாத்மா ரவிசந்திரன், வேங்கடசுப்பிரமணியன்,கனகம்மன் பாபு, கவிஞர் முகேஷ், ராஜேஷ், தனபால், லோகேஷ் மற்றும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, பவானி.

யூகேஜி ஆசிரியைகள் சந்திரகலா, பௌலின், மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் உதயகுமார், ராமன் மற்றும் ஏராளமான பெற்றோர்களும் கலந்துக் கொண்டு பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். விழாவினை ஆசிரியர்கள், ஆனந்தி, காசாவயல் கண்ணன்ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top