புதுக்கோட்டையில் இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்களின் பேரணியை பிரமாண்டமாக நடத்தியதற்கு தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டையில் அண்மையில் 1000 -க்கும் மேற்பட்ட இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்களின் பேரணியை மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர் அந்தோணி பிரமாண்டமாக நடத்தினார்.
முதல் முறையாக மாவட்ட அளவில் ஆயிரம் மாணவர்களை ஒருகிணைத்து பிரமாண்ட பேரணியை நடத்தி, மாவட்டத் திற்கு பெருமை சேர்த்தன்மைக்கு மாவட்ட கல்வி அலுவலர் அந்தோணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில், தனியார் பள்ளி தாளாளர்கள் அரிமளம் மெர்க்குரி பள்ளி ரமணன், புதுக்கோட்டை லண்டன் லுக் பள்ளி கிருஷ்ணமூர்த்தி, கட்டுமாவடி யேகோவா நிசி பள்ளி மேசியா சந்தோஷம், புதுக்கோட்டை ஸ்ரீ ராஜ் பள்ளி முத்துகருப்பன், ஆலவயல் தாய் தமிழ் பள்ளி நிர்வாகி மாதவன்.
கலை அறிவியல் பள்ளி முருகன், தாஞ்சூர் மருதம் பள்ளி தமிழ்மாறன், குழிபிறை மீனாட்சி பள்ளி ராஜ் மற்றும் பிற பள்ளி தாளாளர்கள் பொன்னாடைஅணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வித்துறை சார்பில் பிறருக்கு உதவு என்ற கருத்தை மையமாகக் கொண்டு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆயிரம் இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்களின் பேரணி பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் தங்கம் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று பேரணியை தொடக்கி வைத்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.