புதுக்கோட்டை ஸ்ரீ அபிராமி மழலையர் தொடக்கப் பள்ளியில். ஆண்டு விழா விமரிசையாக நடைபெற்றது புதுக்கோட்டை அபிராமி ஸ்ரீ அபிராமி தொடக்கப்பள்ளியில். ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது மாவட்ட கல்வி அலுவலர் {தனியார் பள்ளியின்} செ. அந்தோணி தலைமை வகித்தார்.
பள்ளியின் தாளாளர் உமா ராணி முன்னிலை வகித்தார்.பள்ளி ஆலோசகர் பேராசிரியர் கருப்பையா வரவேற்றார். விழாவில் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் மற்றும் ஆசிரியைகள் பணியாளர்களுக்
கும் நினைவு பரிசுகளும் வழங்கி பேசினார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் மாணவிகள் சிங்கப்பெண்ணே பாடலுக்கு நடனமாடினார்கள். அதில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, குடியரசுத்தலைவர், அன்னைதெரசா, கல்பனாசாவ்லா உள்ளிட்ட பெண் ஆளுமைகளின் உருவப் படங்களை கையில் ஏந்திபடி ஆடியதை அனைவரும் மகிழ்ச்சியுடன் கைதட்டி ஆராவாரம் செய்தனர். விழாவில் பள்ளியின் ஆலோசகர்கள் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார், பேலஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள்,பல்வேறு பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள் சமூக ஆர்வலர்கள் மாணவ ,மாணவிகள் .பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் சிறப்புடன் செய்தனர்.