Close
மே 23, 2025 6:53 மணி

பார்வை குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியில் 48 வது ஆண்டு விழா

புதுக்கோட்டை

அரசு பார்வையற்றோர் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி புதுக்கோட்டையில்  48வது ஆண்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் தொழிலதிபர்  எஸ் வி எஸ் ஜெயக்குமார்,  ஆர்த்தி ஹோட்டல் உரிமையாளர் குமார்,  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

பள்ளி மாணவர்கள்  பல்வேறு  போட்டிகளில்  கலந்து கொண்டு தன் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.  மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கி வாழ்த்தினர்.

இப்பள்ளி எட்டாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது எட்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள்  நினைவு பரிசை  வழங்கினார்.   மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

சிறப்புடன் செயல்படும் இந்த அரசு சிறப்பு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. பார்வையில் குறைபாடு உடைய பள்ளிப்பருவ மாணவர்கள் இப்பள்ளியில் சேர்த்து பயன்பெறலாம் என பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top