Close
நவம்பர் 22, 2024 8:15 காலை

ஆசிரியர் தகுதித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆக 30 ல் தொடக்கம்

புதுக்கோட்டை

ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு இலவச பயிற்சி பெறலாம்

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித்தேர்விற் கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், வேலை நாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் இயங்கி வருகிறது.

இவ்வட்டத்தின் சார்பாக பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தால் நடத்தப்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு TET தாள்-I மற்றும் TET-II -க்கான பயிற்சி வகுப்புகள் 31.08.2023 (வியாழக் கிழமை) அன்று நேரடியாக மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப் படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பு உரிய திட்டநிரல் மற்றும் கால அட்டவ ணைப்படி சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படுவ தோடு, இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்பட்டு, அவ்வப்போது மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் தகுதித் தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்கள் இந்த அலுவலக நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன் பெறலாம்.

இப்பயிற்சி வகுப்புகளில் சேருவது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்  மெர்சி ரம்யா தகவல் தெரிவித்துள் ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top