Close
டிசம்பர் 3, 2024 5:01 மணி

முதிர்ச்சி பெற்ற முழு பொறியாளர் களை வரவேற்க நாடு காத்திருக்கிறது:ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

ஈரோடு

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமையில் நடைபெற்ற முதலாண்டு வகுப்பு தொடக்க விழா

நம்நாடு பொறியாளர்களை மட்டும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. முதிர்ச்சி பெற்ற முழு பொறியாளர் களையும்  வரவேற்கவும்  காத்திருக்கிறது என்றார் பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் .

ஈரோடு நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி களின் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். விழாவை நந்தா கல்வி அறக்கட்டளை யின் உறுப்பினர் பானுமதி சண்முகன், சிறப்பு விருந்தினர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.
சிறப்பு விருந்தினர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேசியதாவது:  இக்கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகளின் தொடக்க விழாவில் மாணவர்கள், பெற்றோருடன் கூட்டமாக பங்கேற் பதை காணும்போது திருவிழா போன்று காட்சிய ளிக்கிறது.  இதுபோன்ற நிதழ்வு இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் காண இயலாது.
இங்கு வந்த பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் சுமைகளை தூக்கி வருவதை காண முடிந்தது. உங்கள் பிள்ளைகள் குழந்தை பருவத்தைக் கடந்து கல்லூரி வாழ்க்கையை தொடங்க இருக்கிறார்கள்.
குழந்தை பருவம் என்பது பள்ளியோடு முடிந்து விட்டது. அவர்களின் கடமைகளை சுயமாக செயல்படுத்துவதற்கு பொறுப்பேற்க வேண்டிய தருணம் இது. ஆதலால் என் பிள்ளை கஷ்டமேபடக் கூடாது என்ற எண்ணத்தை முழுமையாக கைவிட்டு பிள்ளைகளிடமே பொறுப்பை ஒப்புடைக்க பெற்றோர்கள் முன்வர வேண்டும்.
நம் நாடு பொறியியல் பட்டதாரிகளை மட்டும் எதிர்பார்த்து நிற்கவில்லை. பரிபூர்ணமான முதிர்ச்சி பெற்ற முழுமையான பொறியாளர்களை வரவேற்கவே காத்திருக்கிறது. இதற்கு அண்மையில் நிலவில் காலடி வைத்த “சந்திராயன் 3” தான் சாட்சி. ஆதலால் மாணவர்கள் தாங்கள் பெரும் கல்வித் துறையில் அகல கால் பதித்து மிகச்சிறந்த பொறியாளனாக உருவெடுக்க வேண்டும் என்றார்.
நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தனது  தலைமை உரையில் பேசியதாவது: இன்றைய மாணவர்கள் தங்களிடம் உள்ள திறமைகளை முதலில் அடையாளம் காணுதல் மிக அவசியம்.
அத்தகைய திறனை முழு மூச்சோடு செயல்படுத்தும் பட்சத் தில் வாழ்வில் மிக உன்னத நிலையை அடையலாம். அதுவே பெற்றோர்களின் அளவற்ற மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் காரணமாக இருக்க முடியும்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கூறியதைபோல மாணவர்கள் பள்ளி படிப்பில் மட்டுமின்றி புதிய கண்டுபிடிப்பு களிலும் கவனம் செலுத்த தேவையான வசதி வாய்ப்புகளை கல்லூரியில் உருவாக்கித் தருகிறோம்.
அத்துடன், கல்லூரியில் புதிய வேலைவாய்ப்புகளை பெற்று தரவும், அர்ப்பணிப்பும், பொறுப்பும் கொண்ட சிறந்த பொறி யாளராக மாணவரை அடையாளம் காணச் செய்து முன்னேற் றம் அடைவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறோம்.
இதை பயன்படுத்தி மாணவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு சிறந்த பொறியாளனாக அடையாளப்படுத்தி கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார்.
கல்லூரி முதல்வர் முனைவர் என். ரெங்கராஜன் வரவேற்றார். நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர்கள் எஸ்.நந்தகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி,  முதன்மை செயல் அலுவலர் எஸ்.ஆறுமுகம்,  நந்தா தொழில் நுட்ப வளாகத்தின் இயக்குநர் செந்தில் ஜெயவேல், நிர்வாக அலுவலர் ஏ.கே. வேலுசாமி பங்கேற்றனர்.   நந்தா தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் எஸ். நந்தகோபால் நன்றி கூறினார்.
#செய்தி- ஈரோடு மு.ப.நாராயணசுவாமி#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top