Close
நவம்பர் 22, 2024 6:11 காலை

டாக்டர்ஸ் காலேஜ் ஆப் நர்சிங் கல்லூரியில் தீப ஒளி ஏற்றும் விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டைடாக்டர் காலேஜ் & ஸ்கூல் ஆஃ நர்சிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவிகளின் தீப ஒளி ஏற்றும் விழா

புதுக்கோட்டை டாக்டர் காலேஜ் அன்ட் ஸ்கூல் ஆப் நர்சிங் கல்லூரியில்  முதலாம் ஆண்டு மாணவிகளின் தீப ஒளி ஏற்றும் விழா கல்லூரியின் கூட்டரங்கில்  தொடங்கியது.

விழாவிற்கு கல்லூரியின் தாளாளர்  டாக்டர் கே.ஆர்.ராமநாதன்  தலைமை  வகித்தார். கல்லூரியின்  முதல்வர்  எஸ். கயல்விழி வரவேற்றார்

இந்நிகழ்ச்சியில் சிறப்பு  விருந்தினர்களாக  புதுக்கோட்டை  கற்பக விநாயகா நர்சிங் கல்லூரியின் முதல்வர் பேராசிரியை எஸ்.சுமித்ரா மற்றும்  புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின்

முதல்நிலை செவிலியர் கண்காணிப்பாளர் (பொ) ஆர். தேன்மொழி ஆகியோர்  கலந்து கொண்டனர். சிறப்பு  விருந்தினர்கள் பேராசிரியை எஸ்.சுமித்ரா மற்றும்  முதல் நிலை செவிலியர் கண்காணிப்பாளர் (பொ) ஆர்.தேன்மொழி  ஆகியோர்  முதலாமாண்டு மாணவிகளுக்கு தீப ஒளி ஏற்றினர். முதல்வர் கயல்விழி உறுதிமொழி வாசிக்க முதலாமாண்டு மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

கல்லூரியின் சிறப்பு விருந்தினர் பேராசிரியை எஸ்.சுமித்ரா  தனது உரையில் செவிலியர் படிப்பு மிக உன்னதமானது.  செவிலியர்களின் சேவை மிகவும் புனிதமானது. இத்தகைய உன்னதமான படிப்பினை தேர்வு செய்தமைக்காக மாணவிகள் பெருமிதம் கொள்ள வேண்டும். நர்சிங் படிப்பு மற்றும் பயிற்சியின் போது மாணவிகள் தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

கல்லூரியின் கௌரவ  விருந்தினர் முதல்நிலை செவிலியர் கண்காணிப்பாளர் (பொ) ஆர்.தேன்மொழி சிறப்புரையாற் றினார்.  அவர் தனது உரையில் மருத்துமனை செயல்முறை பயிற்சியின் போது பயிற்சியை  முறையாக கற்றுக்கொள்ள வேண்டும்.

தொண்டுள்ளதோடு நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் மாணவிகளுக்கு அறிவுறுத் தினார். இந்நிகழ்வில் அனைத்து மாணவிகளும்  மற்றும் பெற்றோர் களும் கலந்து கொண்டனர். நிறைவாக கல்லூரியின் துணை முதல்வர் எம். அனுராதா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top