புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் கல்லூரி பேரவை தொடக்க விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நடந்த கல்லூரி பேரவை தொடக்க விழாவுக்கு, கல்லூரியின் முதல்வர் {பொறுப்பு } முனைவர் நாகேஸ்வரன் தலைமை வகித்தார்.
தேர்வு நெறியாளர் முனைவர் கணேசன் முன்னிலை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் ஆதவன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.
சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா கலந்து கொண்டு கல்லூரி பேரவையை தொடங்கி வைத்து பேசுகையில், மாணவர்கள் நன்கு படித்து தங்கள் எதிர்காலத்தை நன்கு தீர்மானித்துக் கொள்ள வேண்டும் ஆரோக்கியமான சமூக ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அகில இந்திய அளவில் கல்வியில் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
கல்லூரி கல்விப் பணியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த முனைவர் நாகேஸ்வரன், முனைவர் சேதுராமன் ‘முனைவர் மேரி ஹேமலதா, முனைவர் கணேசன் மற்றும் முனைவர் ஆதவன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். பின்னர் மாணவப் பிரதிநிதிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக மாணவர் பிரதிநிதி அழகர்சாமி வரவேற்றார். மாணவர் மணிகண்டன் நன்றி கூறினார்.