Close
ஜூலை 7, 2024 11:30 காலை

கந்தர்வகோட்டை இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய கல்வி தினம்

புதுக்கோட்டை

மௌலானா அப்துல் கலாம் ஆசாத்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய கல்வி தினம் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா  கலந்து கொண்ட தேசிய கல்வி தினம் குறித்து பேசியதாவது:

இந்தியாவில், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 அன்று தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.

இது அறிவு மற்றும் கற்றலின் ஆற்றலைக் கொண்டாட அர்ப்பணிக்கப்பட்ட தினம். நமது சமூகத்தில் வளமான வரலாறு மற்றும் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. கல்வி தனிமனித வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும், தேசிய வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்குகிறது.

நவம்பர் 11- 1888 -ல் பிறந்த அபுல் கலாம் ஆசாத் ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர், எழுத்தாளர் , நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய அரசின் முதல் கல்வி அமைச்சரானார்.
முதல் இந்தியக் கல்வி அமைச்சராக, சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் ஆசாத்தின் முக்கிய கவனம் கிராமப்புற ஏழைகள் மற்றும் குழந்தைகளுக்கு கல்வி கற்பது. அவர் கவனம் செலுத்திய மற்ற முக்கிய பகுதிகள் வயது வந்தோர் கல்வியறிவு.

14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவசம் மற்றும் கட்டாயம், உலகளாவிய ஆரம்பக் கல்வி, மற்றும் இடைநிலைக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சியின் பல்வகைப்படுத்தல், இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்பை ஊக்குவிப்பதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார்.

மௌலானா அபுல் கலாம் ஆசாத் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் கல்வித்துறையில் ஆற்றிய பணியை போற்றும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.  முன்னதாக தன்னார்வலர் ரஷ்யா  வரவேற்றார். தன்னார்வலர்கள் கெளசல்யா,விஜி, மகாலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top