Close
நவம்பர் 22, 2024 2:22 காலை

வாசிப்பு திறனை மேம்படுத்தும் இல்லம் தேடிக் கல்வித் திட்டம்…

புதுக்கோட்டை

இல்லம்தேடிக்கல்வித்திட்ட ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றிய மங்களா கோவில் இல்லம் தேடிக் கல்வி மையத்தை ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் ரகமதுல்லா பார்வையிட்டு போது காயத்திரி, தேவயானி, விமலா ஆகியோர் மையங்கள் செயல்பாட்டில் இருந்தது.

மாண்வர்களின் தமிழ், ஆங்கில வாசிப்பு திறன் ஆய்வு செய்யப்பட்டது. மாணவர்கள் அனைவரும் சிறப்பாக வாசித்தனர்.மையத்தின் செயல்பாடுகளை உற்று நோக்கி ஆலோசனை வழங்கியதாவது மாணவர்கள் வருகையை தினந்தோறும் இல்லம் தேடி கல்வி செயலில் பதிவேற்றம் செய்ய வேண்டும் .

மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி தொடர்ந்து அளிக்க வேண்டும் எனவும், எண்ணும், எழுத்தும் திட்டம் தொடக்க மாணவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடைமுறை யில் உள்ளது.

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் நடை பெறும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைபெறும் கற்றல் கற்பித்தல் முறைகளை பெற்றோர்களுடன் கலந்து உரையாட வேண்டும் என்றும், கற்பித்தல் போக கற்பித்தல் உபகரணங் களை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top