Close
ஜூலை 7, 2024 11:08 காலை

 குமாரராஜா மழலையர் தொடக்கப்பள்ளியில்  விளையாட்டு போட்டி         

புதுக்கோட்டை

குமாரராஜா மழலையர் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா

புதுக்கோட்டை பூங்காநகர்  குமாரராஜா மழலையர் தொடக்கப்பள்ளியில்  விளையாட்டு போட்டி நடைபெற்றது.                                                                                                                                          புதுக்கோட்டை பூங்காநகர்  குமாரராஜா மழலையர் தொடக்கப்பள்ளியில்  நடந்த விளையாட்டு  விழாவுக்கு, பள்ளியின் தாளாளர்  பி.கருப்பையா தலைமை  வகித்தார்.

தலைமை ஆசிரியை அன்னபூரணி  முன்னிலை வகித்தார். ஆசிரியை பார்கவி வரவேற்றார். மஹாராணி ரோட்டரி சங்க தலைவி கருணைசெல்வி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் ஒலிம்பிக்  தீபம் ஏற்றி விளையாட்டு போட்டியை தொடக்கி வைத்தார்.

பின்னர்  மாணவ,மாணவியர்   அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். பிரமிடு,   ஓட்டப்பந்தயம், குழந்தைகளின் கண்ணைக் கவரும் யோகா,கராத்தே, சிலம்பு மற்றும்    நடனம், கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக  நடைபெற்றது.

புதுக்கோட்டை
குமாரராஜா மழலையர் பள்ளியில் நடந்த லிளையாட்டு விழா

போட்டிகளில் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி யுடன்  கலந்து கொண்டு  மாணவ , மாணவிகள்  தங்களது  திறமைகளை வெளிப் படுத்தினார்கள். போட்டிகளில்  பங்கு பெற்று  வெற்றி பெற்றவர் களுக்கு    பரிசு, சான்றிதழ் களை மஹாராணி ரோட்டரி சங்க தலைவி கருணைசெல்வி  வழங்கி வாழ்த்தினார்.

விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியை அன்னபூரணி , ரோட்டரி  சங்க நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் மாணவ , மாணவிகள், பெற்றோர்கள்    கலந்து  கொண்டனர். விழா  ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள்  செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top