Close
நவம்பர் 21, 2024 2:06 மணி

மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயித்து விட முடியாது

சென்னை

அண்ணா நிர்வாகவியல் பணியாளர் கல்லூரி இயக்குனர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர்

மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயித்து விட முடியாது  என்றார் விக்ரம் கபூர்
மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயித்த விட முடியாது என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும் என அண்ணா நிர்வாகவியல் பணியாளர் கல்லூரி  இயக்குனர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர் சனிக்கிழமை  தெரிவித்தார்.
சென்னை வண்ணாரப்பேட்டை டி.எஸ்.டி. ராஜா மகளிர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 36-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு கல்வி குழும தலைவர் கே.சி.எஸ்.கே. அசோகன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில்  அண்ணா நிர்வாகவியல் பணியாளர் கல்லூரி இயக்குனர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர் கலந்து கொண்டு கடந்த ஆண்டு போட்டி தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
அப்போது விக்ரம் கபூர் பேசியது: ஒழுக்கத்தின் மூலம் தான் நல்லறிவை பெற்றிட முடியும். எனவே கல்வி நிறுவனங்கள் ஒழுக்கம் சார்ந்த கல்வியை போதிப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வெறும் மதிப்பெண்களை பெறுவதால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயித்து விட முடியாது என்பதை பெற்றோர்கள் முதலில் உணர வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் குடிமை பணி அதிகாரிகள், மருத்துவர்கள் பொறியாளர்கள்  போன்றவர்கள் மட்டுமே சமூகத்தில் உயர்ந்தவர்கள் என்பதை கருத்தில் கொண்டு இத்தகைய படிப்புகளுக்காகவே முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இன்றைக்கு நிதி, கட்டமைப்பு, ஊடகம், விருந்தோம்பல், உடல் நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய பணிகளில்  சேர்வதற்கான வழிமுறைகள் குறித்து என்பது குறித்து 11 மற்றும் 12 -ஆம் வகுப்பில் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களையும் அறிவுரைகளையும் கல்வி நிறுவனங்களும், ஆசிரியர்களும் வழங்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் இந்த படிப்பை தான் படிக்க வேண்டும் என்று  வலியுறுத்தக் கூடாது. ஒவ்வொரு குழந்தையும் தனித்தனி திறமைகளை கொண்டவையாகவே இருக்கும். எனவே அவர்களிடம் இருக்கும் நுட்பமான அறிவி னை ஆய்வு செய்து அவர்களின் திறமைக்கு ஏற்ப படிப்புகளை தொடர பெற்றோர்களும், ஆசிரியர்களும் வழிகாட்டுதல்களை தொடர வேண்டும்.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு வழிகாட்டுதல்களை அளித்திடலாம். ஆனால் அவர்களை கட்டுக்குள் வைத்திருக்க கூடாது என்றார் விக்ரம் கபூர்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ஜெயபாலன், பள்ளி முதல்வர் ஜீவகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . ஆண்டு விழாவினை ஒட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top