கந்தர்வகோட்டை அருகே பாதுகாப்பான இணைய நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் முள்ளிக்காப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பாதுகாப்பான இணைய நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பேசியதாவது: அனைத்து பயனர்களுக்கும், முக்கியமாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கும் பாதுகாப்பான இணையத்தை மேம்படுத்துவதற்காக கொண்டாடப்படும் ஐரோப்பிய ஒன்றிய அளவிலான முயற்சியாகும். ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
பாதுகாப்பான இணைய தினத்திற்கான இந்த ஆண்டு தீம் சிறந்த இணையத்திற்காக ஒன்றாக என்பதாகும். முக்கியமாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு இணையத்தை பாதுகாப்பான மற்றும் சிறந்த இடமாக மாற்ற அனைத்து பங்குதாரர்களும் மற்றும் ஒன்றிணைவதில் இது கவனம் செலுத்துகிறது. தன்னார்வலர் அரங்கநாயகி வரவேற்றார். தன்னார்வலர்கள் சங்கீதா, அனுசுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.