புதுக்கோட்டை மாவட்டம், மணவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் முதலாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்திட தமிழக அரசு சமீபத்தில் ஆணையிட்டது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், மணவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் முதலாவது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். பின்னர் பட்டதாரி ஆசிரியர் உதயகுமார் ஆண்டறிக்கை வாசித்தார். இந்நிகழ்விற்கு பள்ளியின் தலைமையாசிரியர் அருணாசலம் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வடிவேல் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேல், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் லெட்சுமி, தில்லையப்பன், ஆவான், இராஜலெட்சுமி, கிருஷ்ணன், சுப்பிரமணியன், சதீஷ் மற்றும் பேராசிரியர்சி. ஹரிராம் ஜோதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பச்சைபூமி அமைப்பின் புரவலர் பி.ஆண்டனி சிறப்புரையாற்றினார். 2023-24 ஆம் கல்வியாண்டில் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற 107 மாணவர்களுக்கு அறமனச்செம்மல் தெய்வத்திரு.சீனு.சின்னப்பா அவர்களின் சார்பாக ரூ.17,000 மதிப்பிலான கேடயம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ஆதித்தன் சார்பில் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. தவசியப்பன் நினைவாக அனைவருக்கும் பிஸ்கட் வழங்கப்பட்டது.
மாணவர்களின் 14 கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் காயத்ரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அனைவருக்கும் ஆசிரியர்கள் சார்பாக மதிய உணவு ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது.நிறைவாக பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.