திருவண்ணாமலையில் எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை, தகவல் தொடர்பு துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் எஸ் கே பி பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில் ஆர்டினோ மற்றும் ராஸ்பெர்ரி தொழில்நுட்பங்கள் மூலமாக சிஸ்டம்ஸ் கற்றறிதல் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். இணை செயலாளர் அரங்கசாமி, முதன்மை நிர்வாக அதிகாரி சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார். கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் புருஷோத்தமன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கிறிஸ்ட் தி கிங். பொறியியல் கல்லூரியின் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் துறை தலைவர் சுரேஷ்பாபு கலந்து கொண்டு ஆர்டினோ மற்றும் ராஸ்பெரி தொழில்நுட்பங்கள் மூலமாக சிஸ்டம் கற்றறிதல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்தத் துறையில் பெருகி வரும் வேலை வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்த கருத்தரங்கில் பிஆர்ஓ சையத் மற்றும் மாணவ மாணவியர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சி என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு
திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை சார்பில் தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்த எதிர்கால போக்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். இணை செயலாளர் அரங்கசாமி, முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார்.
மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவர் முனைவர் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரஜின் குழும நிறுவனத்தின் தலைமை அதிகாரி டாக்டர் பிரஜின் துரைசாமி கலந்துகொண்டு தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்த எதிர்கால போக்குகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்தக் கருத்தரங்கில் துறை சார்ந்த மாணவ மாணவியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.